search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானம்"

    • ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
    • உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).

    இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

    இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

    இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.

    குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

    ஒட்டன்சத்திரம் அருகே வருகிற 19-ந்தேதி பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அண்ணாமலையார் ஆன்மிக குழு ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கிய தினமான தைப்பூசம் திருவிழா வருகிற 21-ந்தேதி முருகன் தலங்களில் கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முருகன் தலங்களில் தைப்பூசம் விழா பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

    தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் தைப்பூசத்தை முன்னிட்டு விரதம் இருந்து காவடியை சுமந்தபடி பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்டுக்கு ஆண்டு பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    அப்படி செல்லும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக வழிநெடுக ஏராளமானோர் குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பழ வகைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது உண்டு. சில அமைப்புகள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்குகிறார்கள்.

    சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு கடந்த 8 ஆண்டுகளாக பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்க அந்த குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே உள்ள எல்.என். திருமண மண்டபத்தில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக அந்த திருமண மண்டபத்தில் “பழனி முருகன் அன்னதான குடில்” அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு 18-ந்தேதி மாலை பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடு ஆகியவற்றுடன் அன்னதானம் தொடங்குகிறது.

    19-ந்தேதி காலை 9 மணிக்கு மகாசக்தி பூஜை, வேல் பூஜை, வேல்மாறல் பாராயணம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி வரை பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் 12 மணியில் இருந்து பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்கப்படும்.

    அன்னதான குடில் பகுதியில் பக்தர்களுக்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அன்னதான சேவையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பொருள் உதவி, நிதி உதவி செய்யலாம் என்று அண்ணாமலையார் ஆன்மிக குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நிதி உதவி செய்ய இயலாத பக்தர்கள் அன்னதான சேவையில் பங்கேற்று தங்களால் முடிந்த பணிகளை செய்யலாம். இந்த சேவையில் விருப்பம் உள்ள பக்தர்கள் 99443 09719, 98421 98889 எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்.

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
    புதுடெல்லி:

    மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



    எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

    அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

    ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்
    திங்கட்கிழமை - தேங்காய் சாதம்
    செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்
    வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்
    சனிக்கிழமை - புளியோதரை
    நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

    1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
    2. பூமி தானம் - இகபரசுகங்கள்
    3. வஸ்த்ர தானம்  (துணி) - சகல ரோக நிவர்த்தி
    4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி

    5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
    6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
    7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
    8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்

    9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
    10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
    11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
    12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

    13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
    14. பால் தானம் - சவுபாக்கியம்
    15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
    16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
    ஆண்டவனே வந்தாலும் உன்னைத் திருப்திப்படுத்த இயலாது’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நாம் திருப்தியாக வாழ, யார் - யாரை, எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
    ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆசைப்பட்ட பொருட்களைக் கொடுத்தால் திருப்திப்படுத்தி விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு எதைக் கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது. அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ‘ஆண்டவனே வந்தாலும் உன்னைத் திருப்திப்படுத்த இயலாது’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நாம் திருப்தியாக வாழ, யார் - யாரை, எப்படித் திருப்திப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    தேவர்களை - ஹோமத்தினாலும்

    முன்னோர்களை - சிரார்த்தத்தினாலும்

    தெய்வங்களை - தரிசனத்தாலும்

    பெற்றோர்களை - பிரியத்தினாலும்

    பிள்ளைகளை - பாசத்தினாலும்

    மனைவியை - நேசிக்கும் அன்பாலும்

    முதலாளியை - உழைப்பின் மூலமும் திருப்திப்படுத்தலாம்.

    எப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு சிலருக்கு தானம் செய்யும் மனம் இருக்கும்; ஆனால் பணம் இருக்காது. ஒரு சிலரிடம் நிறைய பணம் இருக்கும்; ஆனால் தானம் செய்வதற்கு மனம் இருக்காது. மனமும், பணமும் இணைந்து யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தான, தர்மங்களை தடையின்றிச் செய்ய இயலும். தானம் செய்து புகழ்பெற்றவன் கர்ணன்.

    அப்படி கலியுலக கர்ணனாக ஒருவர் விளங்க வேண்டுமானால் ஒன்பதாம் இடத்தில் சுப கிரகம் இருக்க வேண்டும். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி, குருவுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். லக்னாதிபதியை, ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள். 
    மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    திருபுவனை:

    திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×