search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாட்சி"

    தமிழக சட்டசபையில் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. #TNAssembly


    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் 30-ந் தேதி அவர்களது பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார்.

    இந்த நிலையில் தனி அதிகாரிகளின் 6 மாத பதவி காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீடிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவை சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TNAssembly

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
    எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×