என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள்"
- டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பெட்ரோலிய டேங்கர் லாரியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லாரியின் ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட டேங்கர்லாரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களில் கூட மதுபாட்டில்கள் கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
पेट्रोल टैंकर से शराब की तस्करीबिहार : मुजफ्फरपुर में हाजीपुर मार्ग पर उत्पाद विभाग की टीम ने तेल टैंकर से विदेशी शराब और बीयर बरामद की है. हालांकि टैंकर चालक मौके से फरार हो गया. टैंकर जब्त कर थाने ले जाया गया है. मामले की जांच जारी है. #Bihar | #OilTanker pic.twitter.com/rqGIlg2vSo
— NDTV India (@ndtvindia) October 23, 2024
- பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
- ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.
போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் கொண்டு போலீசார் அழிக்க முயன்றனர். அப்போது அந்த இடத்திற்கு முந்தியடித்து கொண்டு வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களை தூக்கிச் சென்றனர். மதுபிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH - Andhra cops line up liquor bottles for disposal, locals grab and run off.#AndhraPradesh #Police #Liquor #LiquorBottles #Viral #ViralVideo pic.twitter.com/ItRHeGhHw6
— TIMES NOW (@TimesNow) September 10, 2024
- மதுபான கடைக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது.
- பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது.
அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும் மதுபானங்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுபான கடைக்கு மதுபானங்கள் அடங்கிய 110 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் 30 பெட்டிகள் கீழே விழுந்துள்ளது.
மதுபானங்கள் கீழே விழுந்ததை கண்டுபிடித்த ஓட்டுநர் வாகனத்தை திருப்பி வருவதற்குள் பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1069 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகம் பின்புறம் கலால் பிரிவு வட்டாட்சியர் ராகவி முன்னிலையில் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் கென்னடி தலைமையிலான காவல்துறையினர் 1069 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழித்தனர். அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
- அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் சாராயம் விற்ற திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில்சப்-இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா தங்கவேலு மற்றும் போலீசார் மாறு வேடத்தில் இரவு முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி மணி நகர் பஞ்சமுக ஆஞ்நேயர்கோவில் அருகில் புதுவை சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 திருநங்கைகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயம் மற்றும் ஏராளமான புதுவை மதுபாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றி அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.
கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-
பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.
டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.
டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
- திருச்சுழி அருகே மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குலசேகர நல்லூர் பகுதியில் சாக்கு பையுடன் நின்று கொண்டி ருந்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான கூறிவந்தார். இதில் சந்தேகம் அடைந்த போாலீசார் அவரது பையை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக சுமார் 75 மதுபான பாட்டில் கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சுழி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மேலகண்ட மங்கலம் பகுதியிலும் திருச்சுழி போலீசார் ரோந்து சென்ற போது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கடம்பன் மகன் மருதுபாண்டி (வயது 33) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பின்னர் மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- ஆட்டோவில் 1100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தீ மிதி திடல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டி வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 1100 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சேர்ந்த திலிப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார்.
கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்