search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றுமை"

    நாடு முழுவதும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். #onenessandunity #Modi #ModiinManipur
    இம்பால்:

    பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் இன்று சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

    தலைநகர் இம்பால் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஹப்டா கங்ஜீய்பங் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மணிப்பூர் மன்னர் பாக்யசந்திரா பயன்படுத்திய தலைப்பாகையை அணிந்தவாறு பேசிய மோடி, மணிப்பூரி மொழியில் மக்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.



    பின்னர் மோடி பேசியதாவது:-

    இன்று தொடங்கப்படும் இந்த திட்டங்களால் மக்களின் வாழ்க்கைமுறை மிகவும் சுலபமாக மாறும். குறிப்பாக, குழந்தைகளும் விவசாயிகளும் பலனடைவார்கள்.

    முந்தைய மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தங்களுக்கும் டெல்லிக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பதாக மக்கள் கருதிவந்தனர்.

    எங்கள் ஆட்சியில் இந்த தூரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மணிப்பூரில் உள்ள கடைக்கோடி கிராமம்வரை மின்சார வசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

    டெல்லி தங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ளதாக மக்கள் நினைக்கும் வகையில் எங்கள் பணிகள் விரைவாக இருக்கும்.

    இங்குள்ள மக்களை சந்தித்து பேசுவதை நான் விரும்புகிறேன். உங்கள் நிலை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு நான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உங்களைப் பார்ப்பதில் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

    பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளேன். நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #onenessandunity #Modi #ModiinManipur

    ×