search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்கள்"

    மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து நேற்று 400 போலீசார் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். #Madhyapradesh #Policemen #Holiday
    போபால்:

    மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.



    பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

    இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.

    போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday

    ×