search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்மார்க்"

    டென்மார்க் நாட்டில் சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #DenmarkTrainaccident
    கோபென்ஹாகென்:

    டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக நேற்று முன்தினம் ஒரு பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தது.
     
    கிரேட் பெல்ட் பிரிட்ஜ் என்னும் பாலத்தின் மீது வந்தபோது அந்த பயணிகள் ரெயில் மீது பக்கவாட்டில் சென்ற ஒரு சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DenmarkTrainaccident
    குரோஷியா - டென்மார்க் இடையிலான ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 1-1 சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது.

    இதையடுத்து முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடந்த டென்மார்க், பிரான்ஸ் இடையிலான போட்டி கோல் அடிக்காமல் டிராவில் முடிந்தது. #DENFRA #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும், முதல் பாதியை போலவே இருந்தது. இதிலும் இரு அணியினரும் கோல் அடிக்க முடியாமல் திணறினர். இறுதிவரை எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 

    ‘சி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணியும் முதல் இரண்டு இடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றன. அடுத்ததாக நடைபெற உள்ள போட்டிகளில் நைஜீரியா - அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து - குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #DENFRA #WorldCup2018 #FIFA2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது? என்பதை ஜபியகா என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. #WorldCup2018 #Goat #AustraliaDenmark
    சமரா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா-டென்மார்க் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எது? என்பதை ஜபியகா என்ற ஆடு மூலம் கணிக்கப்பட்டது. ரஷியாவின் சமராவில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் இந்த ஆடு, இந்த போட்டி டிராவில் முடியும் என்று கணித்துள்ளது.

    அதாவது இரு நாட்டு தேசிய கொடியின் அருகில் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொள்ளாமல், ‘டிரா’ என்று அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருந்த அருகில் உள்ள உணவை சாப்பிட்டது. முன்னதாக இரு நாட்டு அணிக்குரிய அருகில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை இரண்டு முறை முகர்ந்து பார்த்ததால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆகும் என்றும் ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆட்டின் கணிப்பு மெய்யாகுமா அல்லது பொய்யாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

    பெல்ஜியம் அணி இந்த உலக கோப்பையில் மகுடம் சூடும் என்று இந்த ஆடு ஏற்கனவே கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #WorldCup2018 #Goat #AustraliaDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

    முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
    டென்மார்க் நாட்டில் பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஸ்டாக்ஹோம் :

    டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல். எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் டென்மார்க்கில் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் என அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

    இந்த தடை குறித்த சட்ட வரைவை இன்று அந்நாட்டு அரசு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 75 உறுப்பினர்கள் இந்த தடை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இதைத்தொடர்ந்து, டென்மார்க்கில் இனி பொது இடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படும். இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×