search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு"

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மெரினா சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #NewYear2019 #marinabeach

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

    சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கூடுவார்கள்.

    எனவே விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கு நள்ளிரவு 1 மணி வரையே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


    நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடுபவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், அவர்களை வீட்டில் கொண்டுவிட ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நீச்சல் குளத்தின் மேலே மேடை அமைத்தோ அல்லது நீச்சல் குளத்தின் அருகிலோ புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள். இரவு 9 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கி விடும் என்பதால் 9 மணிக்கு மெரினா கடற்கரை சாலை மூடப்படும். அதன் பிறகு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 12 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் கமி‌ஷனர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினா கடற்கரையில் கேக் வெட்டுகிறார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு கேக் வழங்கப்படுகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. அதை மீறி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

    சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இரவு 8 மணி முதல் 12 மணிவரை ஒரு ஷிப்டாகவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை மற்றொரு ஷிப்டாகவும் போலீசார் பணியாற்ற உள்ளனர். பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் தனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை தடுக்க முக்கிய மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. முக்கிய சாலைகளில் கூடுதலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.  #NewYear2019 #marinabeach

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘‘எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள்” என்ற அம்மாவின் கனவினை நனவாக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி, மக்கள் வாழ்வு வளம்பெற தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

    இப்புத்தாண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கும் நிலையில், நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019
    2018-ம் ஆண்டு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், 2019 ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், உலகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    வைரமுத்து தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது,

    `ஆண்டில் ஏது பழையதும் புதியதும்?
    நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
    நாளும் புதியதாகும்.
    புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்.
    வாழ்த்துக்கள்.
    #2019 #HappyNewYears2019 #HappyNewYear'

    இவ்வாறு கூறியிருக்கிறார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019

    உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



    இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

    இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

    அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

    விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
    ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், அங்கு புத்தாண்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #HappyNewYear2019
    நடிகர் ரஜினிகாந்த் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார்.

    ரஜினி மட்டும் முன்னதாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்று இரவு அல்லது நாளை செல்ல இருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம். நகரங்களில் அலங்கார விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

    கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை மாலை 6 மணி வரையிலும் கடைகள் திறந்திருக்கும். பெரும்பாலான ஊர்களில் கடைசி நேர பரிசுப் பொருட்கள் வாங்ககூட்டம் அலைமோதும். நியூயார்க் போன்ற நகரங்களில் கடும் குளிர் என்ற போதிலும், சாலைகளிலும் கடைவீதிகளிலும் அலை அலையாக மக்கள் கூட்டம் இருக்கும்.

    அமெரிக்காவுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அங்கு கடைவீதியில் ஸ்வெட்டருக்கு மேல் நீண்ட கோட் அணிந்து கையுறை, தலையில் குல்லா தொப்பியுடன் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் நடந்து சென்றுள்ளார்.



    ஆனாலும் அடையாளம் கண்டுள்ள ரசிகர்கள் அவரை அணுகி படம் எடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

    நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டம் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்தியர்களும் பெருவாரியாக கலந்து கொள்வது வழக்கமாகும்.

    நியூயார்க்கை வலம் வரும் ரஜினிகாந்த் டைம்ஸ் கொயர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Rajinikanth #HappyNewYear2019 

    புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CleanMarina #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை வடபழனியில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜனவரி 3-ம் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும், புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் மெரினாவை சுத்தம் செய்யுங்கள், பின்னர் மாவட்டம், மாநிலத்தை சுத்தம் செய்யலாம் என்றனர். #CleanMarina #MadrasHighCourt
    ×