search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெசேஜ்"

    கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். #GoogleMaps #message



    கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம். எனினும், இந்த அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது.

    புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வியாபார மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் கூகுள் மேப்ஸ் பயனர்கள் சிறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.



    இதன் மூலம் சிறு வியாபார நிறுவனங்கள் எதிர்காலத்தில் அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இத்துடன் வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அழைக்காமல், அவர்களை வேகமாக தொடர்பு கொள்ளலாம்.

    முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட்டோ ரிக்‌ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்த முடியும். இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லியில் மட்டும் ஆட்டோ ரிக்‌ஷா அம்சம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர கூகுள் தனது டுயோ செயலியில் வழங்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கூகுள் டுயோ செயலியில் லோ லைட் மோட் மற்றும் க்ரூப் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.
    ×