search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிவு"

    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 293 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 179 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீரும், டெல்டா பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 85.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 84.82 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2.3 அடி குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 869 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 750 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 21-ந் தேதி 94.27 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 91.9 அடியாக இருந்தது.

    இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 90.97 அடியானது. இதனால் 3 நாட்களில் 2.3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1029 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1005 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 98.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 97.53 அடியாக இருந்தது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் சுமார் 1 அடி குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,164 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,029 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 12 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 101.25 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 99.2 அடியாக இருந்தது. இன்று மேலும் சரிந்து 98.37 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 3 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதமாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,866 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1,513 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 100.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 100 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இதனால் 5 நாளில் 5 அடி சரிந்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    கடந்த 26-ந்தேதி 4,406 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,538 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 3,012 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.

    கடந்த 26-ந் தேதி 103.7 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 99.88 அடியாக இருந்தது. இன்று நீர்மட்டம் மேலும் ஒரு அடி சரிந்து 98.87 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 5ஆயிரத்து 783 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4ஆயிரத்து 406 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 104.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.76 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
    சென்னை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

    இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

    இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 7 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 24 ஆயிரத்து 712 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரத்து 901 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 215 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 17 ஆயிரத்து 825 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கடந்த 22-ந் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பிய நிலையில் நேற்று வரை அணையின் முழு கொள்ளளவான 120 அடிக்கும் மேல் நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து குறைந்ததால் இன்று நீர்மட்டம் 119.82 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் நேற்று 1227 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 806 கன அடியாக குறைந்தது.
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடியானது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

    நேற்று 1227 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 806 கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 33.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 33.36 அடியாக குறைந்தது.
    ×