என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 138719
நீங்கள் தேடியது "காளி"
பில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும்.
தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குள் இந்த பூஜையைத் தொடங்க வேண்டும். ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும்.
கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின் தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.
ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள் / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3 தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.
பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களை அழைக்காமல் செய்வது சிறப்பு.
முக்கியமான விஷயம் : பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.
மந்திரம்:-
ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||
கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின் தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.
ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள் / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3 தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.
பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களை அழைக்காமல் செய்வது சிறப்பு.
முக்கியமான விஷயம் : பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.
மந்திரம்:-
ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||
தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது.
தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது. காளிதேவி பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும் பெண் தெய்வமாகும். ‘காளி’ என்பதற்கு கருப்பு என்று பெயர்.
காலம் மற்றும் மரணம் என்பதை குறிக்கும் சொல்லாகவும் கருதலாம். அகண்ட சிவந்த கண்களும், நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டும், ஆயுதங்களை கையில் ஏந்திய படியும் காளிதேவி தோற்றமளிக்கிறாள். பெண் தெய்வமான துர்க்காதேவி, மகிஷாசூரன் என்ற அசுரனை எதிர்த்து போரிட்டாள்.
மகிஷா சூரனின் படைகளில் இருந்த மற்றொரு அசுரன், ரத்தபாசன். இவனை காளி தேவி வதம் செய்தாள். அவனில் இருந்து வெளிப்பட்ட ரத்தமானது போர்க்களத்தையே மூழ்கடிப்பதாக இருந்தது. அந்த ரத்தத்தை காளிதேவி குடித்து, ரத்தபாசனின் உடலை தூக்கி எறிந்தாள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் உருவாகி இருக்கும் `காளி' படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kaali #VijayAntony
விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காளி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி 4 வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதள் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kaali #VijayAntony
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காளி' படத்தின் விமர்சனம். #Kaali #KaaliReview #VijayAntony
அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது.
மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார்.
ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார்.
இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது.
கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி - அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.
ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா.
4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.
பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `காளி' ஏமாற்றம். #Kaali #KaaliReview #VijayAntony
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் "காளி". இப்படத்தில் வரும் "அரும்பே" என்ற பாடல் இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது. அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.
என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.
"அரும்பே" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்" என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’ படத்தின் கதாநாயகியான சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிருத்திகா உதயநிதி பேசும்போது, ‘பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.
எனக்கும் தயாரிப்பாளர் பாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம். உயிரை பணய வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன்.
4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்’ என்றார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் காளி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சுனைனா, இன்னமும் படபடப்பாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #Kaali #Sunaina
சுனைனா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் சுனைனாவுடன் அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசும்போது, ‘தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்’ என்றார்.
சுனைனா பேசும்போது, ‘ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்’ என்றார்.
விஜய் ஆண்டனியுடன் காளி படத்தில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ், நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி என்று கூறியிருக்கிறார். #RKSuresh #VijayAntony
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர் ப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.
கிருத்திகாவை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர் புல்லான தலைப்பு என்றார் ஆர்.கே.சுரேஷ்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X