என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைரமுத்து"
சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.
இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு விஷால் கூறினார்.
ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.
ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.
அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
மும்பை:
பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
‘மீ டூ’ என்ற டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பெண்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.
பிரபல இந்தி நடிகர் நானேபடேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா அளித்த புகாரை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, மலிங்கா ஆகியோர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் மீ டூ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் ராகுல்ஜோரியை வேலைவாய்ப்பு விஷயமாக சந்தித்தபோது அவர் பாலியல் ரீதியாக பேசி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார். புகார் கூறிய பெண்ணின் பெயர் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ராகுல்ஜோரி 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவர் பிரபல நெட்வொர்க் நிறுவனத்தில் துணைத் தலைவராக வேலை பார்த்து வந்தார். #RahulJohri #metoo
சென்னை:
பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறல் குறித்தும் அடையாளம் காட்டும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற தலைப்பில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக ‘மீ டூ’ என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவே தற்போது டுவிட்டரில் பிரசாரமாக உருவெடுத்துள்ளது.
பாலியல் அத்துமீறலை அம்பலப்படுத்தும் விதமாக தொடங்கிய இந்த பிரசாரம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் அத்துமீறியதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அக்பர் உள்பட பலருக்கு எதிராக மீ டூ பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
அரசியல், திரை உலகம் என பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் இப்போது வெளிஉலகுக்கு தெரியவருகிறது.
தமிழகத்தில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மீது பத்திரியாளர் சந்தியா மேனன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் அடுத்தடுத்து ‘மீ டு’ ஹேஸ்டேக்கில் புகார் தெரிவித்தது தற்போது பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த வைரமுத்து அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடு எங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது.
சமீப காலமாக நான் தொடர்ச்சியா அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும் என்று தெரிவித்தார்.
பாடகி சின்மயி கருத்துக்கு திரைப்பட பிரபலங்களான சமந்தா, சித்தார்த், வரலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ‘மீ டூ’ பிரசாரத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மீடு பிரசாரம் இன்னும் பல விவாதங்களை காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உண்மையை இந்த உலகுக்கு சொல்ல வேண்டும். பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முயற்சியை ஆதரிப்போம். முகமூடிக்கு பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். #kanimozhi #metoo
The staff at Vairamuthu sir’s office KNOW. His closest confidants know. They are also his enablers.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
Vairamuthu sir, you KNOW what you did.
With due respect your #TimesUp
I dont care if I ever sing or dub in this industry ever.
This is my story. And this is the truth.
LIAR! https://t.co/osvaGLb4mQ
— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
@Chinmayi Respect ! May God be with you....Actually thank you ! #metoo
— Ghibran (@GhibranOfficial) October 10, 2018
Dear @23_rahulr and @Chinmayi I know the both of you for ten years now . I don’t know two more brutally honest people .It is this attribute of yours that I value most in our friendship . I love you with all my heart and what you say is the TRUTH !! #istandwithchinmayi
— Samantha Akkineni (@Samanthaprabhu2) October 10, 2018
சினிமாவில் மிகச்சிறந்த பாடல்களாலும், தனிச்சிறப்பு பெற்ற நாவல்களாலும், கவிதைகளாலும் உலக அளவில் பிரசித்தி பெற்றவர் கவிஞர் வைரமுத்து. இவர் பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும், திரப்பட பாடல்களையும் இயற்றியுள்ளார். மிகச்சிறந்த இவரது எழுத்துக்களுக்கு பல்வேறு விருதுகள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் கள்ளிக்காட்டு இதிகாசம். வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும், வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த புத்தகத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை எனவும், இந்த விருது தமிழக மக்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார். #Vairamuthu #KallikattuIdhikasam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்