search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திலீப்"

    மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்த்தது குறித்து தலைவர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal #NadigarSangam
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சங்க தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    மேலும் இந்த கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரம்யா நம்பீசன், பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். அரசியல் கட்சியினரும் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் சங்கத்தில் மீண்டும் இணைய விரும்பவில்லை என்று திலீப் கூறியபிறகும் இந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

    நடிகர் சங்க புதிய தலைவரான மோகன்லால் தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். திலீப் விவகாரம் தொடர்பாக இதுவரை அவர் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவந்தார். தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக மோகன்லால் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கமான ‘அம்மா’ நடிகர், நடிகைகள் நலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த சங்கத்தில் 485 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 137 பேர் நடிகைகளாகும். ஏராளமான நடிகர்கள் சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளனர். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.

    எங்கள் சங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்டும் அன்று முதல் இன்று வரை அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிராக நடிகர் சங்கம் ஒருபோதும் செயல்படவில்லை.

    தற்போது சிலரின் தூண்டுதல் காரணமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மேலும் நடிகர் சங்கத்தை ‘மாபியா’ போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்? என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்ப்பது என்பது சங்கத்தை சேர்ந்த பெரும்பான்மை யானவர்களின் விருப்பமாக இருந்ததால் அந்த தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப் பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக ராஜினாமா செய்துள்ள நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

    இது எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது. இதில் வெளியில் உள்ள மற்றவர்கள் தலையிட என்ன தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை நடிகர் சங்கத்தில் சேரமாட்டேன் என்று நடிகர் திலீப் நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். #ActressAbductionCase #Dileep
    மலையாள நடிகர்களுக்காக இயங்கி வரும் அமைப்பு ’அம்மா’. இதில் மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் கடந்த வாரம் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

    இதனை கண்டித்து ‘அம்மா’வில் இருந்து பாதிக்கப்பட்ட அந்த நடிகை மற்றும் சக நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்கள்.

    இந்தநிலையில் நடிகர் திலீப் ‘அம்மா’வுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சங்கத்தில் என்னை மீண்டும் சேர்க்க உள்ளதாக அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய தீர்மானத்தை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆனால் நான் எந்த தவறும் செய்யாமல் வழக்கில் சிக்கிக் கொண்டேன். இதில் இருந்து நிரபராதி என்று விடுதலையாகும் வரை எந்த சினிமா சங்கத்திலும் சேர விரும்பவில்லை. நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.



    முன்னதாக நடிகை ரம்யா நம்பீசன் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘‘திலீப்பை மீண்டும் சேர்த்துக்கொண்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். இனியும் இதை எல்லாம் பொறுத்துகொண்டு இருக்க முடியாது. அதனால் விலகி விட்டோம்.

    நாங்கள் நால்வரும் அந்தச் சங்கத்திலிருந்து விலகிய பின்னர் அவர்கள் எங்களுக்கு ஏதாவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் மற்ற பெண்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

    நாங்கள் பெண்களுக்கான தனிஅமைப்பு தொடங்கும் வரை அதற்கான தேவை இல்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் பெண்களுக்கு என்று உருவாக்கிய ஒரு இடம் அது. சினிமாவில் பெண்களுக்கு எப்படிப்பட்ட இடம் இருக்கவேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு வருகிறோம். ரேவதி மாதிரியான மூத்த நடிகைகள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் நடக்கும் வரை அம்மா சங்கத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் நல்ல உறவு தான் இருந்தது. இப்போது அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாங்கள் அடுத்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். #ActressAbductionCase #Dileep #AMMA
    ×