search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 139734"

    சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், மக்களும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.#RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    புதுடெல்லி:

    சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையேயான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடுத்த முடிவாய், இருவருக்கும் தற்காலிக விடுப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்தது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் பிரதமரின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராகவும், ரபேல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க தடுப்பதை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குரல் கொடுக்க ஒன்றிணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமரின் ஊழல்கள் நிறுத்தப்படும் வரையில் எதிர்க்கட்சிகளும், மக்களும் காங்கிரஸ் உடன் இணைந்து போராட வேண்டும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையின்போது தமிழக அரசு தெரிவித்தது. #TNNewSecretariat #MadrasHC
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் கட்டியதில், ஊழல் நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரிக்க நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது.



    இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விசாரணை கமி‌ஷன் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை கமி‌ஷன் என்பதே கண் துடைப்பு நாடகம் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிடலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாண சுந்தரம் ஆகியோர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகெட் ஜெனரல் சத்தியநாராயணன் ஆஜராகி, “புதிய தலைமை செயலக கட்டிட ஊழல் குறித்து போலீஸ் சுப்பிரண்டு ஒருவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் பல நூறுகோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாகவும். இதன் மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்”.

    வழக்கிற்கு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர நீதிபதிகள் விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு பிறப்பித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். #TNNewSecretariat #MadrasHC

    ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவியில் இருப்பது நியாயம் இல்லை என்று நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் கூறியுள்ளார். #KumariAnanthan
    நாமக்கல்:

    நாமக்கல்லில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் கவிஞருக்கு சிலை வைக்க வேண்டும். சிலையை நாமக்கல்லிலும் வைக்கலாம். சென்னை போன்ற இடங்களிலும் வைக்கலாம். அவருடைய நினைவை போற்றுகின்ற வகையில் நினைவு மண்டபமும் கட்டலாம். முதல் முதலாக தொடங்க வேண்டியது நாமக்கல்லில் தான். அரசு விழாவாக அவருடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று வேண்டுகிறேன். இல்லையென்று சொன்னால் எங்களை போன்றவர்கள் அல்ல, நாமக்கல் கவிஞரை போற்றுகின்ற அத்தனை பேர்களும், சேர்ந்து நாமக்கல் கவிஞர் சிலையை நிறுவுவதற்கு முன்வரவேண்டும். அனுமதியை வேண்டுமானால் தாருங்கள்.

    ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், பொறுப்பில் இருந்தாலும் அப்படி நடக்கவில்லை, மக்கள் நம்புகின்ற வகையில் ஆதாரங்களோடு வெளியில் சொன்னால், ஆதாரங்களை காட்டினால் அவர்கள் இருக்கின்ற பதவியிலேயே இருக்கலாம். இல்லையென்றால் பதவியில் இருப்பது கூட நியாயமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KumariAnanthan
    ஊழலை தட்டிக் கேட்டவர்களை கைது செய்வதா? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்களை அமைக்க மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.12 கோடி மதிப்பிலான பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நிலையில், ரூ.5 கோடி மதிப்புள்ள பணிகளை பேரூராட்சியே மேற் கொள்கிறது.

    சிட்லபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட சேதுநாராயணன் தெருவில் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 17-ந்தேதி தான் கடைசி நாள் ஆகும்.

    ஆனால், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவதற்கு 20 நாட்கள் முன்பாகவே மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    அப்படியானால், இந்த பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஒருவருக்கு வழங்குவதென முன்பே முடிவு செய்து விட்டு, பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பதையும், இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்து கொண்ட ‘சிட்லப்பாக்கம் ரைசிங்’ என்ற உள்ளூர் விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த சிலர் அதுகுறித்து அதிகாரிகளிடம் வினா எழுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் சிட்லப்பாக்கம் ரைசிங் அமைப்பைச் சேர்ந்த 61 வயது முதியவர் குமார், பாலச்சந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


    இவர்கள் மீதும், சிவக்குமார், சுனில் ஆகிய மேலும் இருவர் மீதும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிட்லப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சுனில் பணி நிமித்தமாக பல நாட்களுக்கு முன்பே வெளிநாடு சென்றுள்ளார். இது பொய் வழக்கு என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    இதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. ஊழல் நடக்காத துறை எதுவுமே இல்லை. ஆனால், உள்ளாட்சித் துறை அளவுக்கு வேறு எந்த துறையிலும் அப்பட்டமாக ஊழல் நடக்கவில்லை.

    ஒரு பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படுவதற்கு முன்பாக அப்பணியை ஒருவருக்கு வழங்க முடிகிறது என்றால் உள்ளாட்சித் துறை ஒப்பந்தங்களை வழங்குவதில் அத்துறையின் அமைச்சரும், அவரது பினாமிகளும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை அறியலாம்.

    ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டது சிட்லப்பாக்கத்தில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி ஊழல்களை எதிர்ப்பவர்களுக்கு இதே நிலை தான் ஏற்படுகிறது.

    தமிழகத்தின் ஆளுனர் மாளிகை இந்த அடக்கு முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? என்பது தெரிய வில்லை. சட்டத்தின் ஆட்சியை நடத்துவதில் ஆளுனருக்கு அக்கறை இருந்தால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்ய அறிவுறுத்த வேண்டும். அத்துடன் உள்ளாட்சித்துறை ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss

    தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியே இல்லாதவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #Edappadipalaniswami #DMK #MKStalin
    திருச்சி:

    திருச்சி மற்றும் புதுக்கோட் டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு திருச்சி வந்தார். முன்னதாக அவருக்கு திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் முயன்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அந்த சதிகளை முறியடித்து பொது மக்களின் ஆதரவுடன் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி வருகிறோம்.

    எம்.ஜி.ஆரின் திட்டங்களை ஜெயலலலிதா நிறைவேற்றியது போல், அவரது கனவுத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்ற வாய்ப்பினை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

    தி.மு.க. மீதுள்ள ஊழல் வழக்குகளை மறைத்து திசை திருப்பவே ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க.தான்.

    தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியே இல்லாதவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு தலைவர் பொறுப்பு வழங்கவில்லை, செயல் தலைவராக ஆக்கினார். ஆட்சி பொறுப்பையும் தரவில்லை. அப்படியிருந்தும் அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை வந்து விட்டது.

    மக்கள் அந்த வாய்ப்பை அளித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விடுத்து பொய் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. அ.தி.மு.க.வை யாராலும் உடைக்கவும் முடியாது. தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Edappadipalaniswami #DMK #MKStalin
    பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து ஆதாரம் கிடைத்தவுடன் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என பா.ஜ.க. இளைஞரணி தலைவர் கூறியுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கோட்ட பொறுப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திராவிட கட்சிகள் முன்பெல்லாம் ரோடு போட சொல்லி போராட்டம் நடத்தின. இப்போது ரோடு வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். ஹைட்ரோகார்பன் வாயு எங்கு இருக்கிறதோ அங்குதான் எடுக்க முடியும். அதனால் விவசாயத்திற்கும், மக்களுக்கும் தீங்கு ஏற்படும் என்றால் கண்டிப்பாக மத்திய அரசு அந்த பகுதியில் திட்டத்தை செயல்படுத்தாது. நடிகர் கருணாஸ் ஜாதி மோதலை தூண்டும் விதமாக அநாகரீகமாக பேசினார். ஆனால் எச். ராஜா யாரையும் தனிப்பட்ட முறையிலோ, ஜாதிமத மோதலை ஏற்படுத்தும் விதத்திலோ பேசவில்லை.

    சமூகத்தில் நடைபெறும் ஊழல், லஞ்சங்களை பார்த்து உணர்ச்சி வேகத்தில் பேசினார். அவ்வளவுதான். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என கவர்னர் கூறியுள்ளார். இந்த ஊழல் எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதற்கான ஆதாரம் கிடைத்த உடன் கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
     
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் இருந்து அதிகம் எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பார்கள். காங்கிரசாரின் பொய் பிரச்சாரம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
    மாவட்ட தலைவர் முருகானந்தம், நகர தலைவர் செல்வம், மாவடட பொதுச்செயலாளர் சிவம் சக்திவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் எம்.கே. கணேசமூர்த்தி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews
    தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார்களா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேல் முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும், அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சிலர் சொல்வது தவறு.

    தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லை.

    எனவே ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணை வேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. அவர் பல கல்வியாளர்களை சந்திக்கும் போது தான் எனக்கு இப்படிப்பட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சேலத்தில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார். #BJP #Tamilisaisoundararajan
    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

    நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.


    கவர்னர் உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விட்டு மறுநாள் மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் இதனை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.

    தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். #Congress #RobertVadra
    புதுடெல்லி:

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது பெங்களூர் நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரமேஷ் என்பவர் புதிய ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பெங்களூர் கங்கேனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின் டி.எல்.எப். நிறுவனம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் மீது நாங்கள் லோக்அயுக்தா அமைப்பில் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RobertVadra
    தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரிய வந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மிகவும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

    ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த மாநிலங்களில் முறையே 59 சதவீதம், 56 சதவீதம் ஊழல் நிலவுவதாக கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரிய வந்துள்ளது. அடுத்தபடியாக 17 சதவீதம் ஊழல் காவல்துறையிலும், 15 சதவீதம் ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25 சதவீதம் ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் தேவையில்லை. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதை அத்துறையை அணுகியவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

    எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், ஊழலுக்கு ஆதரவாளர்களாக மாறி ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும், ஆதரிக்கவும் துடிப்பது தான்.

    அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். அதனால் தான் தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    சாதிச்சான்று, பிறப்புச்சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின்இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும்.

    பொது மக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப் படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ் களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும். ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட் டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் இனியும் இத்தகைய சூழல் நிலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே, நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #pmk #RegistrationDepartment

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை என்று ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. #EdappadiPalaniswami #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சரின் (மகனின் மனைவி) மருமகளின் சகோதரியின் கணவருடைய சகோதரருக்குத்தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது நியாயமான விலைப் புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    மேலும் அவர் தன் வாதத்தில், ‘மனுதாரர் கூறுவது போல ஒரு கிமீ தூரமுடைய சாலையை ரூ. 2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் இது இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தப்பகுதியின் மண் தரம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தை மதிப்பு விலைகளைப் பொறுத்து இது மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ. 30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது’ என்றும் வாதிட்டார்.

     


    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ‘லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு. தங்களுடைய விசாரணை விவரங்களை கூட லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க தேவையில்லை’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தான் நியமிக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami #Highcourt

    ஊழல்களை வெளிக்கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என்று வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் பேசினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ADMK
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, வேலாயுதம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் 90 சதவீத உண்மை தொண்டர்கள் சசிகலாவின் பக்கம் இருக்கிறார்கள். டெல்லிக்கு ஏஜெண்டாக பன்னீர்செல்வம் செயல்பட்டதால் தான் முதல்- அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த அவர் உள்பட சிலர் நல்லவர்களாகி விட்டனர்.

    பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பரிசாக எங்களது 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப தீர்ப்பு நமது பக்கம் சாதகமாக வரும். அப்போது இந்த ஆட்சியாளர்களின் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்து ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நாட்டுவோம்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தல், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை மெய்ப்பித்தல் உள்ளிட்ட மக்கள் நலன் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவோம்.

    ஜெயலலிதா எந்தெந்த மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் தடை செய்தாரோ? அதனை தடுக்க கூட வழி தெரியாமல் முதுகெலும்பற்ற ஆட்சி நடப்பது வேதனையளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களே எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2016 மே மாதம் அரவக்குறிச்சியில் நடைபெற இருந்த சட்டமன்ற தேர்தலை நிறுத்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வழிசெய்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பின்னர் தேர்தல் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் வந்தபோது எனக்கு சீட்டு கொடுக்காதீர்கள் என சசிகலாவிடம் தம்பித்துரை வாதிட்டார். அதனை அவர் பொருட்படுத்தாமல் எனக்கு வாய்ப்பளித்ததால் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆனேன். பின்னர் அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.

    ஆனால் திட்டமிட்டு அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கையினை இந்த அரசு புறக்கணித்து விட்டது. கரூர்-கோவைக்கு முதலில் 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என கூறிவிட்டு தற்போது 12 வழிசாலை அமைக்கப்படும் என தம்பித்துரை கூறுகிறார். இந்தியாவில் கூட அத்தகைய சாலை இருக்கிறதா? என கூகுள் வரைபடத்தில் தான் தேடி பார்க்க வேண்டும்.

    புகளூர் தடுப்பணை அமைவது குறித்து ஜெயலலிதாவின் அமைச்சரவையில் திட்ட மதிப்பீடு பெறப்பட்ட நிலையில், அது தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறுவது மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்குவது போல் இருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்று டி.டி. வி.தினகரன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது துணை சபாநாயகராக இருந்து கவனித்து வந்த தம்பி துரைக்கு விசாரணை கமிஷன் ஏன் சம்மன் அனுப்பவில்லை என்பது தெரியவில்லை.

    வருகிற பாராளுமன்ற தேர்லில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம் என தம்பிதுரை கூறுகிறார். அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் வாங்கிவிட்டால் இந்த செந்தில் பாலாஜி அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ADMK
    ×