என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மந்திரி"
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கட்சே. வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். இவர் மீது நில முறைகேடு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புசாவால் நகர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உல்லாஸ் பாட்டீலும் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய உல்லாஸ் பாட்டீல், பா.ஜனதா கட்சி ஏக்நாத் கட்சேவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், “நீங்கள் (உல்லாஸ் பாட்டீல்) நினைப்பதை நான் கண்டிப்பாக யோசிக்கவில்லை. உங்கள் கட்சியானாலும், எனது கட்சியானாலும், யாரும் ஒரே கட்சியில் இருக்கப்போவதில்லை. ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.
அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டும். அநீதி இழைத்தவர்கள் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வலிமையை புரிந்துகொள்வார்கள்” என்றார்.
இதன்மூலம் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் அளித்த பதிலில், “ நான் பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதில்லை. மேலும் கட்சி மீது அதிருப்தியிலும் இல்லை. எனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமாயின் நான் கட்சி தலைவரிடம் இதுகுறித்து பேசி முடிவெடுப்பேன்” என்றார். #EknathKhadse #BJP
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, சுயேட்சைகளுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
அந்த மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளாகும். மெஜாரிட்டிக்கு 116 இடங்கள் தேவை.
காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜனதா 109 தொகுதியையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ்-2, சமாஜ்வாடி-1 சுயேட்சை-4 இடங்களில் வெற்றி பெற்றன.
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு நோட்டாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 22 தொகுதிகளில் பா.ஜனதா குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு நோட்டா முக்கிய பங்கு வகித்தது.
குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை மந்திரி நாராயணன்சிங் குஷ்வா 121 ஓட்டில் தோற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1550 வாக்குகள் கிடைத்தது. தமோ தொகுதியில் நிதி மந்திரி ஜெயந்த் மல்லையா 799 வாக்கில் தோற்றார். இங்குநோட்டாவுக்கு 1,299 ஓட்டுகள் கிடைத்தது.
ஜபல்பூர் வடக்கு தொகுதியில் சுகாதாரதுறை இணை மந்திரி சரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாத்திலும், (நோட்டா 1,209), புர்கான்பூர் தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி 5,120 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 5,700) தோற்றனர்.
இதேபோல காங்கிரசுக்கும் சில தொகுதிகளில் நோட்டாவால் பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் நோட்டாவுக்கு மொத்தம் 5.4 லட்சம் ஓட்டுகள் கிடைத்தது. இது 1.4 சதவீதம் ஆகும். இதன் மூலம் அந்த மாநிலத்தில் 5-வது இடம் கிடைத்தது.
பா.ஜனதா 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளும், பகுஜன் சமாஜ் 5 சதவீத ஓட்டுகளும், ஜி.ஜி.பி. கட்சி 1.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதற்கு அடுத்த இடத்தில் நோட்டா இருக்கிறது. சமாஜ்வாடி ((1.3 சதவீதம்), ஆம் ஆத்மி (0.7 சதவீதம்) ஆகிய கட்சிகள் நோட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. #BJP #Congress #Nota #MadhyaPradeshAssemblyElection2018
மும்பை புறநகர் பாந்திரா குடிசைப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்து குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியதாவது:-
மும்பையில் 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொத்தம் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்துள்ளன. இதில் 33 ஆயிரத்து 946 தீவிபத்துகள் மின்கசிவு காரணமாகவும், 1,116 கியாஸ் கசிவு காரணமாகவும், 14 ஆயிரத்து 329 தீவிபத்துகள் மற்ற பல காரணங்களாலும் நடந்துள்ளன.
இந்த விபத்துகளில் சிக்கி 609 பேர் மற்றும் 5 தீயணைப்பு படையினர் இறந்துள்ளனர்.
மேலும் ரூ. 110.42 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
10 ஆண்டுகளில் பதிவான தீ விபத்துகளில் 3 ஆயிரத்து 151 விபத்துகள் குடிசைப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.
மக்கள் நெருக்கடி மிகுந்த மற்றும் குடிசைப்பகுதியில் நடக்கும் தீ விபத்துகளை தடுக்க 17 சிறிய அளவிலான தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 17 விரைவாக செயல்படும் வாகனங்கள் மற்றும் 3 மினி தீயணைப்பு வாகனங்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வாங்கப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி கமலா மில் காம்பவுண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேரும், சாக்கிநாக்கா பகுதியில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தீ விபத்தில் 12 பேரும் இறந்தது குறிப்பிடத்தக்கது. #RanjitPatil #FireAccident
அமராவதி:
ஆந்திர மாநில நிதி மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான எனமல ராமகிருஷ்ணனுடு பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு இருக்கிறதா? சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி மற்றும் பிற தேசிய அமைப்புகளை அவர் விழுங்கி வருகிறார். அவர் எப்படி பாதுகாவலர் ஆவார்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணனுடுவின் கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழலின் அரசர் ஆவார். அவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து செயல்படுவார்.
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு, தற்போது அவரை மோசடியாளராக சித்தரிக்க முயற்சிக்கிறார்.
அனைத்து மோடியாளர்களும் குழு அமைத்துள்ளனர். அந்த குழுவில் வேகமாக சென்று சந்திரபாபு நாயுடு சேர்ந்துள்ளார். ஆனால் அரசியல் வேற்றுமையில் நாட்டை கொள்ளையடிக்க முயற்சித்தால் அது ஒரு போதும் முடியாது.
சந்திரபாபு நாயுடு தனது ஊழல் வரலாறு வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். இதனால்தான் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP #PMModi
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த பயணத்தின் போது அவர் வட கொரிய மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்றும், சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உழைக்கப்போவதாக உறுதி அளித்து செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் இந்த பயணத்தை சற்றும் எதிர்பாராத வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்துவிட்டார். ஆனால் அதன் பின்னணி என்ன என்பது வெளிவரவில்லை.
ஏற்கனவே மைக் பாம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வடகொரிய ஆளும் கட்சியின் துணைத்தலைவர் கிம் யாங் சோல், அமெரிக்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரியவரவில்லை என்றாலும், அந்த கடிதத்தில் எழுதி இருந்த விஷயங்கள்தான் டிரம்பையும், மைக் பாம்பியோவையும் வட கொரிய பயணத்தை ரத்து செய்ய வைத்து உள்ளது என ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கூறுகிறது. மைக் பாம்பியோவின் பயணத்தை ரத்து செய்தது குறித்து டிரம்ப் அறிவித்தபோது, ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட தான் மேற்கொண்ட முயற்சியில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது நினைவுகூரத்தக்கது. வட கொரிய அரசு ஊடகம், அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாடி உள்ளது. #DonaldTrump #NorthKorea
நார்வே நாட்டின் மீன்வளத்துறை மந்திரியும், அந்நாட்டின் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பெர் சாண்ட்பெர்க் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். ஈரான் நாட்டின் முன்னாள் மாடல் அழகியாக இருந்தவரும், தற்போது மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் என்பவருடன், பெர் சாண்ட்பெர்க் ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார்.
இதனால், மந்திரியின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்றும், பிரதமரிடம் கூட அறிவிக்காமல் மந்திரி சென்ற இந்த ரகசிய சுற்றுலா குறித்தும் பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில், இந்த சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது மந்திரி பதவியை பெர் சாண்ட்பெர்க் ராஜினாமா செய்துள்ளார்.
பெர் சாண்ட்பெர்க், கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாகவும், இது நல்ல முடிவுதான் என்றும் நார்வே பிரதமர் எம்மா சோல்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். #Norway #PerSandberg
மழை பெய்ய வேண்டும் என்று கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தவளைகளுக்கு திருமணம் என்ற வினோத செய்திகளும் அவ்வப்போது வெளியாகும். மழையின் கடவுளாக வணங்கப்படும் வருண பகவானின் மனதை குளிர்விப்பதற்காக இதுபோன்ற சடங்குகள் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க மந்திரி லலிதா யாதவ் பேசுகையில், “பண்டல்காண்ட் பிராந்தியம் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளின் வளர்ச்சிக்காக மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம்,” என கூறியுள்ளார்.
திருமண சடங்கு முடிவடைந்தவுடன் தவளைகள் வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் 2 தவளைகளுக்கு நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த திட்டங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? அவற்றின் பலன் மக்களை முழுமையாக சென்று அடைந்து இருக்கிறதா? என்பது பற்றி பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மந்திரிகள் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடாளுமன்ற இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மந்திரிகள் குழு கூட்டம் நடந்து 7 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது இந்த கூட்டம் நடைபெறுகிறது.
சமீபத்தில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சில சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மந்திரிகள் குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி இருப்பதால், இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
போதிய மழை பெய்யாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அவற்றின் செயல்பாடு போன்றவை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மலேசியாவில் 1 லட்சம் சீக்கிய மதத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புசோங் தொகுதியில் சீக்கியரான கோபிந்த் சிங் டியோ போட்டியிட்டு 47,635 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மஹாதிர் முகமது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கோபிந்த் சிங் டியோ நேற்று தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். மலேசிய வரலாற்றில் இந்திய வம்சாவளியில் வந்த சீக்கியர் மந்திரியாக பதவியேற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான குலசேகரனுக்கு மனிதவளத்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. #GobindSinghDeo #Sikhsworn #Malaysiacabinet
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்