search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்துள்ளாா்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா்.

    பல்லடம் :

    தேனி மாவட்டம், அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் மதிசெல்வம் (60). கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பூவிழிராஜா (34). இவா்கள் இருவரும் கேத்தனூா் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்து ள்ளாா். இதனைப் பாா்த்த மதிசெல்வம், இங்கு புகைபிடிக்கக்கூடாது, வெளியில் செல் என்று கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பூவிழிராஜா அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மதிசெல்வத்தை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் பூவிழி ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தீா்ப்பளித்தாா். இதனைத் தொடா்ந்து பூவிழிராஜாவை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனா்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது டாஸ்மாக் ஊழியர்களான 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் இழப்பீட்டு தொகையாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • கரட்டாங்காட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கரட்டாங்கா ட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் கிளினீக்கில் ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    கிளினீக் நடத்தி வந்த அண்ணாதுரை, டில்லியில் சித்த மருத்துவ படிப்பு முடித்ததாக தெரிவித்தார். அதற்கான சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. மேலும் மருத்துவ படிப்பு முடிக்காமல், நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்து, ஊசி செலுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தெற்கு போலீசில் அண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
    • வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36).     இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது  இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புகார் மனு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.3 கோடி அளவில் கடன் வாங்கப்பட்டதாகவும், அதனை சொந்த உபயோகத்துக்காக சிலர் பயன்படுத்தி கொண்டதாகவும், கடனை முறையாக செலுத்தவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இந்த புகார் மனு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்கள் குமாரராஜா, அவரது சகோதரர் அசோகன் மற்றும் ஆனந்தன், ராமச்சந்திரன், மணிசங்கர், சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு, சென்னையில் சி.பி.ஐ. தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஏ.ஜி.கே. பேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொடர்பு கொண்ட வாலிபருக்கு சிறை தண்டனை
    • சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.செந்துறை அருகேயுள்ள சன்னாசி நல்லூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(வயது32). இவர் ஈச்சங்காடு, பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற போது, 13 வயது சிறுமியை காதலித்து, அச்சிறுமியை கடந்த 15.07.2021 அன்று திருப்பூர் மற்றும் ஈச்சங்காடுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவற்றை ஏகா காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜராகி வாதாடினார்.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

    மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

    • வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செந்துறை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • தொடர் திருட்டில் ஈடுபட்ட

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புரட்சித்தமிழன் (வயது 27). இவர் கடந்த 15.10.2022 அன்று பரணம் கிராமத்தை சேர்ந்த மாடு மேய்க்கும் பெண் ஒருவரிடம் இருந்து 4½ பவுன் தாலிச்சங்கிலியை பட்டப்பகலில் பறித்து சென்றார். இந்த வழக்கில் இரும்புலிக்குறிச்சி போலீசார் புரட்சித்தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 20.12.22 அன்று வழக்கம்போல் நீதிமன்ற காவலுக்காக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புரட்சித்தமிழனை போலீசார் அழைத்து வந்தனர். அவரை பார்க்க அவரது மனைவி லோகபிரியா கோர்ட்டிற்கு வந்துள்ளார். திடீரென தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து லோகபிரியா தற்கொலைக்கு முயன்றார்.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இந்த வழக்கை செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். 5 மாதத்தில் அனைத்து சாட்சிகளையும் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில், புரட்சித்தமிழனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளி த்து உத்தரவிட்டார்.

    • 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி 6 மாத கர்ப்பம்
    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மனோஜ்குமார் (வய து 22). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு ெசய்து போக்சோ சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்
    • சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க அரசிற்கு உத்தரவு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான கூலித்தொழிலாளி 9-ம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.25 ஆயிரமும், அபராத தொகையையும் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


    • காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
    • லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்

    புதுச்சேரி:

    காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, மயிலாடுதுறை மாவட்டம் பருத்திகுடி கிராமப் பகுதி யில் உள்ள மண் குவாரியில் இருந்து, மணல் அளவுக்கு அதிகமாக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக, காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.

    சாலையில் அதிகப்படியான பள்ளங்கள் தோன்றுவதால், ஆற்று நீர் ஊரில் உட்புகும் அபாய நிலை உள்ளது இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், சாலையை உடனடியாக சீர் செய்து தரவேண்டும். அளவுக்கு அதிகமான லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். சாலை சீர்செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு லாரிகளை விடுவித்தனர். 

    • கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார்.
    • அவிநாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் கணேசன் , தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலு குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்ட னை வழங்கி தீர்ப்பளித்தார் .

    இதனை தொடர்ந்து கணேசன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல ப்பட்டார்.

    ×