search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • கள்ளப்பெரம்பூர் புதுக்காலனி தெருவை சேர்ந்த செல்வகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

    தஞ்சாவூர்:

    அரியலூர் மாவட்டம், மண்டபத்தேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 38) சாராய வியாபாரி. தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (38). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து திருநாவு க்கரசு மற்றும் செல்வகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுபடி கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, தஞ்சை தாலுகாபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீ ஸ்வரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் திருநாவுக்கரசு, செல்வகுமார் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த துரைராஜ். இவரது மகன் பெரியசாமி (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமிக்கும், சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் சூர்யாவுக்கும் (26) இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சூர்யா கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சூர்யா ரவுடி என்று போலீசார் தெரிவித்தனர்."

    • மூதாட்டிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    கரூர்:

    கரூர் அருகே உள்ள வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி பணத்ை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் வயது.22, இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோயில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

    தகவலரிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது., பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி, 3 லட்சம் பணம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20 ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி டி.வி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி, நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர், நாகை சிவன் தெற்கு வீதியை சேர்ந்த தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்ட 4பேர் கொண்ட போலீசார் அதிரடியாக கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகப்பன்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் தொட ர்புடைய கொறசேகர் என்பவர் மீது அண்மை யில் குண்டாஸ் சட்டம் பாய்ந்திருப்பதும் குறிப்பி டத்தக்கது.

    • சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கும்படி கேட்டார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவை:

    கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள கருப்பண்ணபதியை சேர்ந்தவர் திலிப்குமார். பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 24). வேலைக்கு செல்லும் திலிப்குமார் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக் கு பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார் தனது மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய பெயிண்டரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    ஆத்தூர் அருகே மாணவி கொடூரக் கொலை: கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ரோஜா(வயது19). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சாமிதுரை கூடமலையில் உள்ள பெரியப்பா சின்னதுரை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவை காதலித்து வந்தார். ஆனால் ரோஜா விலகிச் சென்றதாக கூறப்படுகிறது .இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கு சென்று அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களுக்கு பிறகு மலையிலிருந்து இறங்கிய சாமிதுரையை அந்த பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

    இதை தொடர்ந்து போலீசார் சாமிதுரையை கைது செய்தனர். கைதான சாமிதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவும் நானும் காதலித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரோஜா என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்ல வீட்டின் முன்பு நின்றிருந்த ரோஜாவுடன் பேசினேன் .ஆனால் ரோஜா என்னிடம் பேசாமல் தவிர்த்தார்.

    இதனால் மனமுடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன், அதன்படி கடந்த 6 -ந்தேதி சென்னையில் இருந்து ஆத்தூருக்கு வந்த நான் டீசல் வாங்கி கொண்டு ரோஜா வீட்டிற்கு சென்றேன், அங்கு அவளை தீ வைத்து எரித்து விட்டு நானும் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

    ஆனால் மண் எண்ணையை அவரது உடலில் ஊற்றிய நிலையில் அவர் சகதியில் உருண்டு புரண்டதால் அவர் மீது தீ பிடிக்க வில்லை . மேலும் அவரது சகோதரி நந்தினியும் அவரை தீ வைத்து எரிக்க விடாமல் தடுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தேன்.

    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நான் தொடர்ந்து 3 நாட்களாக மலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சோளக்கதிர், மாங்காய், குச்சிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வந்தேன். தண்ணீர் குடிக்க வந்த போது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார் . தொடர்ந்து அவரை போலீசார்ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் கையாளக்கூடிய பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. #Southernrailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சமீபத்தில் ஆன்மிக பயணத்துக்காக விடப்பட்ட சிறப்பு ரெயில், கோவை அருகே சென்றபோது ‘ஆராதனை’ என்ற பெயரில் பக்தர்கள் ரெயில் பெட்டியிலேயே கற்பூரம் கொளுத்தி வழிபட்டு உள்ளனர்.

    ரெயில்வே சட்ட விதிகளின்படி தீப்பெட்டி, கியாஸ் சிலிண்டர், திராவகம், பெட்ரோல், மண்எண்ணெய், கற்பூரம் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் கையாளக்கூடிய பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டம் இருக்கிறது.

    எனவே ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தரும் விதத்திலும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும் பயணிகள் நடந்துகொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை எந்த விதத்திலும் ரெயிலில் எடுத்து செல்லவோ, பயன்படுத்துவதோ கூடாது.

    அப்படி சட்டவிதிகளை மீறுவோருக்கு அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விஷயத்தில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதுதொடர்பான புகார்களுக்கு பயணிகள் 182 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Southernrailway

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் கிடைப்பதற்கு அரிதான இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Chinesenational #Aadharcard #Nepalcitizen
    கொல்கத்தா:

    பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக நுழைவதற்கு மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டம் நுழைவு வாயிலாக உள்ளது.

    இந்நிலையில், இந்த மாவட்டத்தின் செவோக்கே சாலையில் இருக்கும் ஒரு ஓட்டலில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    அப்போது, சீனாவை சேர்ந்த புஹு வாங் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் என்பவர் மூலமாக இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மேலும், புஹு வாங் மற்றும் கணேஷ் பட்டாராய் ஆகியோர் தங்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய இந்திய ஆதார் அட்டைகளை வைத்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த மோசடி தொடர்பாக இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால்,  நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோரை கைது செய்துள்ள அதிகாரிகள், சீனாவை சேர்ந்த புஹு வாங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கைதான பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். #Chinesenational #Aadharcard #Nepalcitizen 
    ×