search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பா"

    இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. #MountEtna
    சிசிலி:

    ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில் சிசிலித் தீவில் உள்ளது. நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் அங்கு லேசனா நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனால் அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதும் இல்லை. 



    எட்னா எரிமலை வெடிப்பு குறித்து இத்தாலியின் பூகோளவியல் மற்றும் எரிமலைகள் பற்றிய தேசிய ஆய்வு நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. #MountEtna

    ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசா கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #VisaCard #VisaCardservicedisruption #Europe

    லண்டன்:

    விசா கார்டு என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இவ்வட்டையைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக இதர கடன் அட்டைகளைப் போல பொருட்களை வாங்க முடியும். 

    இவ்வட்டையை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும் என விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் மற்றைய நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விசா கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க முடியாமலும், பொருட்கள் வாங்க முடியாமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் விசா கார்டு சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.



    இந்த தொழில்நுட்ப கோளாறினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு விசா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் பிரச்சனை குறித்து விசாரித்து வருவதாகவும், விரைவில் கோளாறு சரிசெய்யப்படும் எனவும் விசா நிறுவனம் தெரிவித்துள்ளது. #VisaCard #VisaCardservicedisruption #Europe
    ×