search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுங்குளிர்"

    டெல்லியில் இன்று காலை கடுங்குளிர் நிலவியது. வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியஸாக குறைந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானது.
    வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, நான்கு டிகிரி குறைந்து வானிலை நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.



    நேற்று டெல்லியில் அதிகபட்சமாக 21.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால்தான் வானம் நீல நிறத்துடன் தெளிவாக வெளிப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    அதேபோல் பஞ்சாப், ஹரியானா மாநிலத்திலும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றுள்ளது.

    லே பகுதியில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 15.8 டிகிரியாக இருந்தது. இது முந்தைய நாள் இரவை விட 3.1 டிகிரி குறைவாகும். இதன் மூலம் நடப்பு குளிர்காலத்தின் அதிக குளிரான இரவாக அந்த இரவு பதிவாகி இருக்கிறது.

    இதைப்போல மாநிலத்தின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு மைனஸ் 5.4 டிகிரியும், காசிகுண்ட் பகுதியில் மைனஸ் 4.9 டிகிரியும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    மாநிலத்தில் ஆண்டுதோறும் கடுங்குளிர் நிலவும் 40 நாள் காலமான ‘சில்லாய்-காலன்’ தொடங்கிய 2-வது நாளிலேயே காஷ்மீரின் பல பகுதிகளில் கடுங்குளிர் வாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். #Kashmir 
    ×