search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பௌர்ணமி"

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம். மார்கழி பௌர்ணமியான இன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
    அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய   பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

    மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
    ×