என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலர்"

    • திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
    • கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார்.
    • விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகேசனை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.

    வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அந்த பெண் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கிராம நிர்வாக அலுவலரை முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஒரிச்சேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த செந்தில் குமார் சம்பவத்தன்று மதியம் தனது பெரியம்மா மகள் ரம்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் செந்தில்குமார் நேராக தொட்டிபாளையம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சகாப்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அல்லது பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலர் திருப்பதி (44). இவர் மணல் திருட்டு தொடர்பாக உளுத்திமடை ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் திருப்பதியுடன் தகராறு செய்து தாக்கினார். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்-அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் செங்குன்றாபுரம் கிராம உதவியாளராக உள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இவருக்கு தங்கை கணவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.

    மேலும் தங்க செயினை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
    • இந்த விழாவில் முன்னாள் நீதிபதி கலந்து கொண்டு பேசினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு நூல் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மூத்த உறுபினர் களுக்கு விருது வழங்கினார். நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் சங்க புரவலர்களுக்கு விருது வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-

    ஒன்றாக சேருவது அனைத்தும் ஒரு காலத்திலே உடைவது என்பது காலத்தின் கட்டாயம், ஆனால் உடைந்தது எதுவும் சேருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. நான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை பற்றி சொல்லுகி றேன்.

    பதவியை அடைய வேண்டும் என்கிற ஆசை வராத மனிதன் இந்த உலகத்தில் கிடையாது. அது குறிப்பாக தமிழர்களை பொருத்தவரை பதவி ஆசை என்பது இறப்பிற்கு பின்னா லும் உண்டு. அதனால்தான் சிவலோக பதவி அடைந்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    • பணியின் போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றார்.
    • தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு இடையே பணியின் போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    அப்போது தமிழரசி , உதவியாளர் சங்கீதாவை பார்த்து கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் உதவியாளர் சங்கீதா.

    இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவை திறந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆன்லைன் வழியில் கிராம நிர்வாக அலுவலர் இடமாறுதல் நடைபெற உள்ளது.
    சேலம்:

    கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதலை, ஆன்லைன் வழியே நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே இடமாறுதல் கேட்போரிடம் விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆணை வழங்க, அரசு அனுமதித்துள்ளது.
    இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் கடிதம் எழுதி உள்ளார்.

    மாறுதல் கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் 
    cra.tn.gov.in/vaotransfer என்ற இணையதளத்தில், ஜூன் 1 முதல் 15-ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பெட்டிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது.
    • மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

    பாஞ்சாகுளம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவின் கீழ் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார்.
    • அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    நம்பியூர்:

    ஈேராடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (26). இவர் நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டம்பா–ளையம் மற்றும் லாகம்பாளையம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் துலுக்கன்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பித்தார். மேலும் இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத்தை சந்தித்தார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை கொட்டக்காட்டுபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அருண்பிரசாத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண்பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    இவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் இன்னும் நிறைவடையாத நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கி உள்ளார்.

    • இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை தாலுகா கம்புளியம் பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் தங்கராஜ். இவரது அலுவலகம் சரளை பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. கடந்த 15 ஆண்டு களாக சிமெண்ட்டு ஓடு போட்ட அறையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்க ராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் மாலை அலுவல கத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது அரசால் வழங்கப்பட்ட லேப்டாப் ஒன்று, லேப்டாப் சார்ஜர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றை காணவில்லை.

    மேலும் இந்த அலுவலக த்தின் அருகே இயங்கி வந்த சண்முகபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலக அறையும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்து பணம் திருட்டு போனதாக அதன் செயலாளர் செந்தில் தெரிவித்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×