search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க ஐம்பெரும் விழா
    X

    முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியபோது எடுத்த படம். அருகில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

    ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க ஐம்பெரும் விழா

    • தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
    • இந்த விழாவில் முன்னாள் நீதிபதி கலந்து கொண்டு பேசினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு நூல் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மூத்த உறுபினர் களுக்கு விருது வழங்கினார். நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் சங்க புரவலர்களுக்கு விருது வழங்கினார். முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-

    ஒன்றாக சேருவது அனைத்தும் ஒரு காலத்திலே உடைவது என்பது காலத்தின் கட்டாயம், ஆனால் உடைந்தது எதுவும் சேருகிறதா என்று எனக்கு தெரியவில்லை. நான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை பற்றி சொல்லுகி றேன்.

    பதவியை அடைய வேண்டும் என்கிற ஆசை வராத மனிதன் இந்த உலகத்தில் கிடையாது. அது குறிப்பாக தமிழர்களை பொருத்தவரை பதவி ஆசை என்பது இறப்பிற்கு பின்னா லும் உண்டு. அதனால்தான் சிவலோக பதவி அடைந்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×