search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம்-  கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்
    X

    (கோப்பு படம்)

    பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம்- கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்

    • பெட்டிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது.
    • மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

    பாஞ்சாகுளம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவின் கீழ் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×