search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்ரெல்"

    டாக்காவில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம். #BANvWI
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சியால்ஹெட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசத்தை துவம்சம் செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 19 ஓவரில் 129 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்று டாக்காவில் 2-வது போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது. முதல் போட்டியில் 130 ரன்னை 10.5 ஓவரிலேயே சேஸிங் செய்ததால், மிகப்பெரிய டார்கெட் நிர்ணயிக்க வங்காளதேச தொடக்க வீரர்களான தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள்.

    குறிப்பாக லித்தோன் தாஸ் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். தமிம் இக்பால் 16 பந்தில் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து லித்தோன் தாஸ் உடன் சவுமியா சர்கார் ஜோடி சேர்ந்தார். சவுமியா சர்கார் 22 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    லித்தோன் தாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 34 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் மெஹ்முதுல்லா ஜோடி சேர்ந்தார். ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் மெஹ்முதுல்லா ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.

    5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த வங்காள தேசம், 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஷாகிப் அல் ஹசன் - மெஹ்முதுல்லா ஜோடி சிறப்பாக விளையாட 15.2 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. இருவரும் கடைசி வரை நிலைத்து விளையாட வங்காளதேசம் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. ஷாகிப் அல் ஹசன் 26 பந்தில் 42 ரன்களும், மெஹ்முதுல்லா 21 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி நான்கு ஓவரில் வங்காள தேசம் விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.
    ×