search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உகாண்டா"

    உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். #UgandaBusAccident
    கம்பாலா:

    உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.



    இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். #UgandaBusAccident
    உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் ஆடல், பாடல், மது விருந்துடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 29 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. #Ugandaboat #Ugandaboatsinks #Ugandaboatcapsize
    கம்பாலா:

    உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவின் அருகாமையில் உள்ள முக்கோனோ மாவட்டத்தை ஒட்டியுள்ள விக்டோரியா ஏரியில் நேற்று சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது.

    வார இறுதிநாள் என்பதால் அந்த படகில் இருந்த அனைவரும் மது போதையில் பாடல் இசைக்கேற்ப நடனடமாடியபடி உல்லாசத்தில் மூழ்கி இருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால் அந்தப் படகு நிலைதடுமாறி, ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் போதையில் செய்வதறியாது தத்தளித்தனர்.



    தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 29 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    கிழக்காப்பிரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியா நாடுகளை இணைக்கும் வகையில் உள்ள விக்டோரியா ஏரி சுமார் 70 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் அடிக்கடி படகு விபத்துகள் நடப்பதுண்டு. நேற்று நடந்த இந்த விபத்தில் சிக்கிய படகு வாரந்தோறும் மது விருந்துக்கு என்று வாடகைக்கு விடப்படும் படகு என தெரியவந்துள்ளது. #29dead #Ugandaboat #Ugandaboatsinks #Ugandaboatcapsize
    உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    கம்பாலா: 

    உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.



    மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறுதியாக, நேற்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

    விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi #BRICSSummit #Johannesburg
    உகாண்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். #ModiinUganda
    கம்பாலா:

    அரசுமுறை பயணமாக நேற்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



    அதன்பின்னர், கம்பாலாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு இந்தியாவின் அலகாபாத் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி மற்றும் வாரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த விழாவுக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

    உகாண்டாவில் அடுத்த தடவை நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiinUganda
    அரசுமுறை பயணமாக இன்று எண்ட்டெபே நகரை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    கம்பாலா:

    தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் நாளை நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக ருவாண்டா நாட்டில் நேற்றும், இன்றும் சுற்றுப்பயணம் செய்தார். ருவாண்டா பயணத்தை நிறைவுசெய்த மோடி இன்று மாலை உகாண்டா வந்தடைந்தார்.

    உகாண்டா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் மோடி முன்னிலையில் இந்தியா - உகாண்டா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Modiinuganda
    அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Modi #BRICSSummit
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஜூலை 23ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் அவர் ஜூலை 27ம் தேதி அங்கிருந்து இந்தியா திரும்புகிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அங்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்ற உள்ளார். #Modi #BRICSSummit
    உகாண்டாவின் வடக்கு பகுதியில் பேருந்து ஒன்று டிராக்டர் மற்றும் லாரியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UgandaBusAccident

    கம்பாலா:

    உகாண்டாவில் சாலை போக்குவரத்து மிகவும் அபாயகரமானதாகும். அங்கு 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் நடந்த சாலை விபத்துகளில் 9,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள் கிர்யாடோங்கோ என்னும் பகுதியில் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே டிராக்டர் ஒன்று விளக்கு இல்லாமல் வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இருட்டில் அந்த டிரக்டருடன் பேருந்து மோதியுள்ளது. 



    அதோடு பின்னே பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #UgandaBusAccident
    ×