search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுத்தம்"

    கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது.
    டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உடல் உறுப்புகளில் கிருமிகள், அழுக்குகள் படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும் வைரஸ் கிருமிகள் சுவாச அமைப்புக்குள் ஊடுருவி செல்ல வாய்ப்பிருக்கிறது.

    கைகளை வாய்க்குள் வைக்கும்போது அதன் மூலம் எளிதாக வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும். அதனால் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவுவது நல்லது. கைகளை கழுவுவதற்கு அதற்குரிய லோஷன்களை பயன்படுத்துவது நல்லது. அவை வைரஸ் கிருமிகளை செயலிழக்க செய்துவிடும்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது மூக்கு, வாய் பகுதியை ‘மாஸ்க்’ போட்டு மூடிவிட்டு செல்வது நல்லது. சுற்றி இருப்பவர்கள் தும்மல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தால் அவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவாமல் தடுக்க இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதற்குரிய ‘மாஸ்க்’கை முகத்தில் அணிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ‘மாஸ்க்’ காற்று, ஈரப்பதம் மூலம் பரவும் வைரஸ்களை வடிகட்ட உதவும். அதனால் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை 80 சதவீதம் தடுத்துவிடலாம்.
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. தினமும் நான் பெருக்கி, துடைத்து, தூசு தட்டி செய்தாலும் சில அழுக்குகள் கறைகள் நீங்கவே இல்லையே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்.

    * எவர்சில்வர் வாஷ்பேசின் மற்றும் ஷெல்ப் உடையவர்கள் எத்தனை சுத்தம் செய்தாலும் சுத்தமாகத் தெரிவதில்லையே என்று அலுத்துக் கொள்கின்றீர்களா? பேபி எண்ணெய், ஆலிவு எண்ணெய் என்ற மிக மென்மையான எண்ணெய் சிறிது எடுத்து பேப்பர் டவல் கொண்டு நன்கு துடையுங்கள். பொருட்கள் பளிச்சிடும். இப்படியா குறிப்பு சொல்வது எனக் கூற வேண்டாம். சில துளி எண்ணெயே போதும்.

    * காய்கறி வெட்டும் போர்டை எத்தனை சுத்தம் செய்தாலும் ஒருவித வாடையுடன் இருக்கின்றதா, ஒரு எலுமிச்சையினை பாதியாக நறுக்கி அதில் ஒரு பாதியினை போர்டில் நன்கு தேய்த்து ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை நீரில் நன்கு கழுவி விட்டால் எந்த துர்நாற்றமும் இன்றி கறைகளும் இன்றி இருக்கும்.

    * காய்கறிகளும், பழங்களும் ‘பிரஷ்சாக’ இருக்க வேண்டும். பப்பிரேப் அல்லது இதற்கான பிரத்யேக உறைகளில் பழங்களையும், இதற்கான உறையில் காய்கறிகளையும் போட்டு வையுங்கள்.

    * வாஷ்பேசினில் ஆப்ப சோடா மாவு போட்டு ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றுங்கள். வாஷ்பேசின், பாத்திரம் சுத்தம் செய்யும் இடம் இவை துர்நாற்றம் இன்றி இருக்கும்.

    * வெள்ளை வினிகர் கொண்டு பிரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து விடுங்கள் ஒரு கல் ஆப்ப சோடாவினை பிரிட்ஜினுள் வையுங்கள். பிரிட்ஜ் வாடை இன்றி இருக்கும்.



    * மிக முக்கியமான, குழந்தைகள் தொடக்கூடாத மருந்துகளை சிகப்பு பேனாவில் ஒரு அட்டை பெட்டியில் போட்டு உயரே வையுங்கள்.

    * ஷர்ட், பேண்டில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டு விட்டதா? முதலில் துணியினை நன்கு தோய்த்து சுத்தம் செய்து காய வையுங்கள். பின்னர் அத்துணியினை பிரிட்ஜ் மேல் பிரீசரில் சிறிது நேரம் வையுங்கள். பிறகு எடுத்தவுடன் எளிதாய் சூயிங்கம் பிரிந்து வந்து விடும்.

    * ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வீட்டின் கறை படிந்த மூலைகளில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் சென்று பஞ்சு போட்டு துடைக்க அழுக்கு கறைகள் நீங்கி விடும்.

    * உங்கள் ஷூக்களுக்குள் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ஷூக்குள் அவ்வப்போது சிறிது பேக்கிங் சோடா தூவி வையுங்கள். சிறிது நேரம் சென்று நன்கு தட்டி விடுங்கள். ஷீ வாடை இன்றி இருக்கும்.

    * ஜன்னல்கள் பிசுபிசுவென அழுக்கால் இருக்கின்றதா? சிறிது வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து ஜன்னலில் நன்கு தடவி பஞ்சு கொண்டு துடைத்து விடுங்கள்.

    * மைக்ரோவேவ் சுத்தம் செய்ய மைக்ரோவேவ் பாத்திரத்தில் நீர் ஊற்றி எலுமிச்சை துண்டுகளை அதில் வெட்டி போட்டு உள்ளே வைத்து 5 நிமிடம் நன்கு சுட வையுங்கள். பிறகு உள்ளே சுத்தமான துணி கொண்டு துடையுங்கள். சுத்தம் செய்யும்போது தகுந்த கையுறைகளை அணிந்து செய்யுங்கள்.

    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    கைகளில் படிந்திருக்கும் கிருமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா?
    கைகளை சுத்தமாக வைத்திருப்பது நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா?

    சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நொடிகளாவது சோப்பிட்டு கைவிரல்களை தேய்த்து கழுவ வேண்டும். விரல் இடுக்குகளையும் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் அதில் படிந்திருந்து நோய் பாதிப்புக்குள்ளாக்கி விடும். கைகளை கழுவிய பிறகு ஈரப்பதமான நிலையிலேயே உலரவைத்து விடக்கூடாது. டவலை கொண்டு துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் டவலை துவைக்காமல் பயன்படுத்தக் கூடாது. அடுத்தவர்களின் டவலையும் உபயோகப் படுத்தக்கூடாது.

    நோய்வாய்பட்டிருப்பவர்களை பார்த்து நலம் விசாரிக்க சென்றிருந்தால் வீடு திரும்பியதும் மறக்காமல் கைகளை கழுவி விட வேண்டும். காயங்களுக்கு மருந்திடுவதற்கு முன்பும், பின்பும் கைவிரல்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். ஒருசிலர் காயங்களுக்கு மருந்து போட்டபிறகுதான் கைகளை கழுவுவார்கள். அது தவறான பழக்கம். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் காயங்களில் படிந்து பாதிப்பை உருவாக்கிவிடும். அதனால் மருந்திடுவதற்கு முன்பும் கழுவ வேண்டும்.

    கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவிவிட வேண்டும். வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டிவிட்டு வீடு திரும்பியதும் கைகளை கழுவுவதும் அவசியமானது. வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் விளையாடினால் உடனே கைகளை சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். இறைச்சி, முட்டை போன்ற உணவு வகைகளை சாப்பிட்ட பிறகும் சோப்பு போட்டு கழுவுவது நல்லது. 
    குழந்தைகளுக்கு 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள்.
    உங்கள் குழந்தை வளர்ந்து சமூகத்துக்குப் பயன்படுகிறவர்களாக இருக்க, ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். 5 வயதுக்கு முன்பிருந்தே, எழுந்ததும் பல் துலக்குவது, தினமும் குளிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்றுவந்த பிறகும் கை கழுவுவது போன்ற அடிப்படை சுத்தம் பற்றிச் சொல்லிக்கொடுத்திருப்பீர்கள். ஐந்து வயதுக்குப் பிறகு, அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

    அவர்களை வெளியே அழைத்துச் சென்ற இடத்தில் சாப்பிடும் சின்ன சாக்லெட்டாக இருந்தாலும், அதன் பேப்பர் கவரை, குப்பைத்தொட்டியில் போடப் பழக்குங்கள்.

    வீட்டில் சாப்பிட்டு முடித்ததும், தட்டை அவர்களின் சின்னக் கைகளால் முடிந்த அளவுக்குக் கழுவ பழக்கப்படுத்துங்கள்.

    அப்பார்ட்மென்ட்களில் வசிக்கிறீர்களா? அங்குள்ள பிற குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஆளுக்கு ஒரு மாடியை என்று சுத்தம்செய்ய பழக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு டஸ்ட் அலர்ஜி பிரச்னை இருந்தால், அவர்கள் ஷெல்ஃபை மட்டும் சுத்தம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

    தெருவில் எச்சில் துப்பினால், எச்சிலில் இருக்கும் கிருமிகளால் தொற்றுநோய்கள் வரும் என்று சொல்லிக்கொடுங்கள்.

    மிகமுக்கியமாக, மட்கும் குப்பைகளையும் மட்காத குப்பைகளையும் தனித்தனி குப்பைத்தொட்டிகளில் போடுவதற்குப் பழக்குங்கள்.
    ×