search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமளி"

    மேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று மக்களவை பணிகள் முடங்கின. #WinterSession #LokSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ரபேல் வழக்கின் தீர்ப்பு மற்றும் சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதுஒருபுறமிருக்க, பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ரபேல் விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.



    12 மணிக்கு அவை கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாளை காலை 11 மணிக்கு மக்களவை மீண்டும் கூடுகிறது. #WinterSession #LokSabhaAdjourned
    மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். உறுப்பினர்களின் அமளி காரணமாக முதலில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    12 மணிக்கு அவை கூடியபோது கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் அதிமுக உறுப்பினர்களின் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி பேனர்களை ஏந்தியிருந்தனர். இதேபோல் திமுக உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து காவிரி பிரச்சனையை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு நோட்டீஸ்கள் வந்திருப்பதாகவும், அனைத்து பிரச்சினைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். அதனை உறுப்பினர்கள் ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் அதே நிலை நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.



    முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு.புஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
    பாராளுமன்றத்தில் இன்று மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. #MekedatuIssue #ADMK #WinterSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #MekedatuIssue #ADMK #WinterSession
    கேரள சட்டசபையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் சபரிமலை உள்பட கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இவற்றை கட்டுப்படுத்த சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பக்தர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. இதற்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில் கேரள சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சபரிமலை தொடர்பாக பி.சி.ஜார்ஜ் எம்.எல்.ஏ. ஒரு நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.

    இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிகள் ஆரம்பமானதும் சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை விவகாரம் தொடர்பான பேனர்களையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ,க்களை சபாநாயகர் அமைதிபடுத்த முயன்றார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சில கருத்துக்களை கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால் அதை கேட்க மறுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோ‌ஷமிட்டபடி இருந்தனர்.

    மேலும் கேள்வி நேரம் தொடங்கியதும் மீண்டும் காங்கிரசார் கோ‌ஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார்.  #KeralaAssemblySession #SabarimalaTempleIssue

    சபரிமலையில் கேரள அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளாவில் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சபரிமலை நடை திறந்தபோது இந்து அமைப்புகள் தீவிரபோராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதன்பின்னர் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கேரள சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் சபரிமலை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில்  சட்டசபை இன்று காலை வழக்கம்போல் கூடியது. அப்போது சபரிமலை விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் ஏந்தியிருந்தனர்.



    வெள்ள பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அவரை பேச விடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டு இடையூறு செய்தனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கே வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

    பாஜக எம்எல்ஏ ராஜகோபால், ஐயப்ப பக்தர்கள் அணியும் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜும், கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். #KeralaAssemblySession #KeralaCongressMLAsProtest  #SabarimalaTempleIssue
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச, அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.



    இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால், அதன்மீது பேசும்படி தி.மு.க. உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், தங்கள் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததை தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #DMK #adjournmentmotion

    ×