search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சியாளர்கள்"

    எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். #Egypttomb #Saqqarapyramid #discoveryrevealed
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் பாலைவனப் பகுதிகளில் பிரமிட்கள் மற்றும் பிரேதங்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மி எனப்படும் கல்லறைகள் பரவலாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தங்களது முன்னோர்களின் நினைவாக இந்த கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே உள்ள சக்காரா பிரமிட் அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான ஒரு மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கல்லறையில் வண்ணமயமான எழுத்தோவியங்கள், பண்டைகாலத்து அரசர்களின் உருவங்கள், இறந்த மதத்தலைவர் மற்றும் அவரது குடும்பத்தாரை அடையாளப்படுத்தும் ஓவியங்கள் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    தொடர்ந்து இப்பகுதியில் அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #Egypttomb #Saqqarapyramid #discoveryrevealed
    இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #Fertility
    பாஸ்டன்:

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குழந்தை பேறுக்காக 656 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கான காரணம் குறித்து பாஸ்டனில் உள்ள லிடியா மிங்குயஷ்-அலார்சன் நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 முதல் 56 வயது நிரம்பியவர்கள். குழந்தை பேறுக்காக சிகிச்சை பெறும் பெண்களின் கணவன்மார்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் குறைந்த எண்ணிகையிலான உயிரணுக்கள் இருந்தன. அவை விரைவாக சென்று கருமுட்டையை அடையும் தன்மையற்றவையாக இருந்தன.


    அதே நேரத்தில் தளர்வான உள்ளாடை அணிந்த ஆண்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் உயிரணுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும். 25 சதவீதம் கூடுதல் வீரிய சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் உள்ளவர்களாகவும் இருந்தனர். விந்து உற்பத்திக்கு உடலின் வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரிக்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்தை அதிகரித்து விந்து உற்பத்தியை குறைக்கிறது.

    அதே நேரத்தில் தளர்வாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்துக்கு பதிலாக குளிர்ச்சியை ஏற்படுத்தி விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதுவே இவர்களின் குழந்தை பேறுக்கு காரணமாக அமைகிறது.

    எனவே இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரை ‘மனித உற்பத்தி’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்தை நிபுணர்கள் பலர் ஆதரித்துள்ளனர். #Fertility 
    மனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுக்கும் பழைய நினைவுகளை அழிக்கும் கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். #badmemories #badmemorieseraser
    ஜெனிவா:

    நமது வாழ்வில் முன்னர் சந்தித்த பயங்கர விபத்து, மனதை உலுக்கிய சில பிரிவுகள் போன்றவை நமது மூளையின் உட்பகுதியில் மிகவும் ஆழமாக பதிந்து நீங்காத பழைய நினைவுகளாக மீண்டும், மீண்டும் மேலெழுந்து, நமக்கு பதற்றமான சூழலையும், சோகமான மற்றும் பயங்கரமான அச்சமூட்டும் உணர்வுகளையும் ஏற்படுத்தி வருவதுண்டு.

    இந்நிலையில், நமக்குள் இதைப்போன்ற பெரிய தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் பதிவுகள் மனித மூளையில்
    எந்த பகுதியில் சேமிக்கப்படுகின்றன? என்ற ஆராய்ச்சியில் தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதைதொடர்ந்து, நரம்பியல் சிகிச்சையால் பயத்தை மறக்கடிக்கும் பயிற்சியின் மூலம் மறுமுறை அதே எலிகளை பரிசோதித்தபோது, முன்பிருந்த அச்சவுணர்வு பெரும்பாலும் குறைந்து காணப்பட்டுள்ளது.



    இதன்மூலம், மூளையின் ‘டென்ட்டேட் கய்ரஸ்’  dentate gyrus எனப்படும் நியூரான்களின் தொடர் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதன் வாயிலாக நம்மை வாட்டி வதைக்கும் பழைய நினைவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் விட்டு மனித சமுதாயத்தை விடுவிக்கலாம் என இந்த ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஜோஹான்னெஸ் கிராஃப் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, மறக்கடிக்கப்பட வேண்டிய பழைய நினைவுகளை அழிப்பதற்கு தேவையான கருவியை (மாற்று முறை) உருவாக்கும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் விரைவில் வெற்றிபெறும் என கருதப்படுகிறது. #badmemories #badmemorieseraser

    ×