search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று பின்னிரவில் சற்று நலிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

    கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருவத்துவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையில், இன்று மாலையில் சமூக வலைதளங்களில் கருணாநிதியை பற்றி விரும்பத்தகாத சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன.

    இதனை தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். 

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் குறைந்து வருவதால் அவர் விரைவில் பூரண குணமடைவார் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KarunanidhiUnwell #MKStalin
    சென்னை :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தனர்.

    மேலும், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்.     

    இந்நிலையில், கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘கருணாநிதிக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட நோய் தொற்று குறைந்து வருவதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார்’ என தெரிவித்தார். #KarunanidhiHealth #KarunanidhiUnwell #MKStalin
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இணையேதுமில்லா சாதனை புரிந்த கருணாநிதி வழியில் என்றைக்கும் பயணிப்போம் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi #MKStalin
    சென்னை :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நலவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விசாரித்தனர்.

    மேலும், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தி.மு.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-

    பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள்,  சட்டமன்றப் பணிகளில் வைர விழா,  கழகத் தலைவராய் பொன்விழா! 

    சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி அரை நூற்றாண்டு கால அரசியலின் அசைக்க முடியாத சக்தியான அருமைத் தலைவரின் புகழை போற்றிப் பாதுகாப்போம்! 

    எத்தனையோ காட்டாறுகள், கணக்கிலடங்கா துரோகங்கள், எதிர்கொள்ளவே முடியாத நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் அத்தனையும் கடந்து, இணையேதுமில்லா சாதனை புரிந்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் என்றைக்கும் பயணிப்போம்! 

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவரது மடலில் குறிப்பிட்டுள்ளார்.  #DMK #Karunanidhi #MKStalin  
    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தடைந்தார். #Karunanidhi #DMK #MKAlagiri
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

    பின்னர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தார்.

    இன்று காலை 5 மணிக்கு மதுரையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தடைந்தார்.#Karunanidhi #DMK #MKAlagiri
    தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். #Karunanidhi #DMK #Ramnathkovind #Rahulgandhi
    புதுடெல்லி : 

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும், உடல் நலிவு ஏற்பட்டிருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    தமிழிசை சவுந்தரராஜன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்டோர் இன்று கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நலம் விசாரித்துள்ளார்.

    ‘தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண நலம் பெற்று பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும்’ என ட்விட்டரில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தார். 

    #Karunanidhi #DMK  #Ramnathkovind  #Rahulgandhi

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.#Karunanidhi #DMK #PMModi
    புதுடெல்லி : 

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    இந்நிலையில், கருணாநிதி உடல்நலன் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    ‘திமுக தலைவர் கருணாநிதி உடல்நலன் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர், விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் வழங்க எந்நேரமும் மத்திய அரசு தயாராக உள்ளது’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK #KamalHaasan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
    வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

    அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். சிறிது நேரத்தில் கமல்ஹாசனும் அங்கு வந்து, ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து புறப்பட்டுச் சென்றார்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க திருமாவளவன், ஜிகே வாசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோபாலபுரம் இல்லம் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

    அவர்களை தொடர்ந்து, ஜிகே வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகியோரும் கோபாலபுரம் வந்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, திருமாவளவன், கே.பாலகிருஷ்னன் ஆகிய இருவரும், ‘கருணாநிதிக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. அதனால், ஓய்வெடுக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறினர்.
    திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Karunanidhi #OPS #DMK #ADMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    மருத்துவக்குழுவினர் வீட்டிலேயே இருந்து அவர்களை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.

    அங்கு ஸ்டாலின் உடன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

    கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் 15 நிமிடத்தில் புறப்பட்டனர். சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியை சந்தித்து பேசினோம். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தார்.

    ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.


    கலைஞர் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து விளக்கம் அளித்துள்ள காவேரி மருத்துவக்குழு அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #MKstalin
    சென்னை:

    தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 95 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

    சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், கருணாநிதியின் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. இதனால், அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு அவரது வீட்டில் கண்காணித்து வருகின்றனர்.

    கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வரவேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #MKstalin
    கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 49 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi
    சென்னை:

    பெரியார் உடனான கருத்து வேறுபாட்டுக்கு பின்னர் ராயப்பேட்டை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் 1967-ல் தமிழகத்தில் ஆட்சிய பிடித்தது. அப்போது முதல் இப்போது வரை தேசிய கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டதில் திமுகவின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.

    திமுகவில் தலைவர் என்ற பதவி இல்லாமலேயே அண்ணா கட்சியை தொடங்கினார். காரணம் தலைவர் பதவி தனது வழிகாட்டியாக பாவித்த ஈ.வெ.ரா.பெரியாருக்கானது என்று அந்த இடத்தை அண்ணா காலியாகவே வைத்திருந்தார். மரணம் வரை அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு? என்று எழுந்த கேள்வி கட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.



    கருணாநிதிக்கும், நாவலர் என்று அழைக்கப்படும் நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் உள்பட பல மூத்த தலைவர்கள் முதல்வர் பதவியை கருணாநிதிக்கும், கட்சித்தலைமை பதவியில் நெடுஞ்செழியனை அமர்த்த சம்மதித்தனர்.

    இறுதியில் கட்சிக்கு தலைவர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு கருணாநிதி தலைவராகவும், நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும், எம்ஜிஆர் பொருளாளராகவும் பொறுப்பு வகிப்பது என முடிவானது. 

    1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

    திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அதிமுக, வைகோ பிரிந்து மதிமுக என்று பல கட்சிகள் உருவானாலும் திமுக எனும் இயக்கத்தின் தொண்டர்களை கட்டுக்குலையாமல் தலைவராக கருணாநிதி காத்து வந்துள்ளார். தேசிய கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து விட்டு அதே கட்சிகள் உடன் அவர் கூட்டணி வைக்கும் சூழலை பலரும் விமர்சித்துள்ளனர்.



    ஆனால், விமர்சனங்களை தனது வளர்ச்சிக்கு உரமாக போட்டு எதிர்ப்பாளர்களை வாயை மூட வைக்கும் உத்தி கருணாநிதிக்கே வாய்த்த ஒன்று. தற்போது, உடல்நலக்குறைவால் வீட்டில் அவர் ஓய்வில் இருந்தாலும் கருணாநிதியுன் பழைய சுறுசுறுப்புக்கும், வேகத்துக்கும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

    கருணாநிதி தலைவராக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்:-

    கட்சி இதுவரை பல தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாலய வெற்றியை ஈட்டியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

    1977 முதல் 1989 வரை திமுக ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகளிலும் திமுக தலைவர் கருணாநிதி கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே பல திட்டங்களைத் தீட்டியதுடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் திமுகவுக்குத் தொடர்பிருப்பிதாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.

    தேர்தல்களில் தோல்வியே காணாதவராக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. 13 தேர்தல்களில் பல தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து அனைத்து தேர்தல்களில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

    என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
    காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். #karunanidhi #DMK
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டதால் மூச்சுவிடுவதை எளிதாக்கும் வகையில், அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    தொடர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாநிதி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். 

    இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கருணாநிதி இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரக்யாஸ்டமி கருவில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து, அவர் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார். 
    ×