search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    • பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    • ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    2.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிடத்தில் கட லுக்குள் இந்த பேனா நினைவு சின்னம் இடம் பெறுகிறது. ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் இந்த பேனா சின்னம் அமைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் மெரினா கடற்கரை உள்பட நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வரையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொட்டிவாக்கம் கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையும் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் பகுதியாக மீன்வளத்துறை 27.9.2016 அன்று அறிவித்துள்ளது. ஆமைகள் குஞ்சு பொரிக்கும் இந்த பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    இந்த பகுதியில் இறந்த நபர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் புதைக்கவோ தகனம் செய்யவோ, கல்லறை கட்டவோ நினைவாலயங்கள் கட்டவோ தடை விதிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள கடல் பரப்பில் சிலைகள் அமைப்பது மற்றும் நினைவாலயங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

    மெரினா கடற்கரையில் தற்போது கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவாலய கட்டிடப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மெரினா கடலுக்குள் கட்ட உள்ள பேனா நினைவு சின்னத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுக்கள் இன்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில், 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு வருகிற பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    • வெண்கல சிலை சென்னையில் தயாராகிறது
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் சிலை உள்ளது.

    இதையடுத்து கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்பொழுது பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்து வருகிறார். வெங்கல சிலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடித்து அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அழைத்து திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான பணிகள் திமுக அலுவலகத்தின் முன் பகுதியில் நடந்து வருகிறது. அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சிலை அமைக்கப்பட உள்ள பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளது .சென்னை ஓமந்தூரார் அரசு விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை தயாரித்த தீனதயாள் என்பவர் சிலையை தயாரித்து வருகிறார்.சென்னை மீஞ்சூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் வெண்கலசிலை தயாராகி வருகிறது. இந்த சிலையை அடுத்த மாதத்திற்குள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியுடன் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக சென்று மொரார்ஜி தேசாயை சந்தித்திருக்கிறார் கலைஞர்
    • என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது? என மொரார்ஜி தேசாய் கேட்டுள்ளார்

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:

    அண்ணா மாநிலங்களவைக்கு சென்றபிறகுதான் அவர் அறிவாற்றலை கண்டு அனைவரும் வியந்தனர். அதேபோல் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக முதன் முதலாக டெல்லி சென்றபோது மிக சாதாரணமாக நினைத்தார்கள். மொரார்ஜி தேசாயை பார்க்க போனார். அவரை 5 மணிக்கு சந்திக்க அவகாசம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் லேட்டாக போனார் கலைஞர். அப்போது கலைஞருக்கு வாழ்த்துகூட சொல்லாமல் மொரார்ஜி தேசாய், 'உங்கள் வீட்டு வேலைக்காரனா நான், உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பதற்கு?' என்று எடுத்தவுடனே நெருப்பை கொட்டியிருக்கிறார்.

    அப்போது கலைஞர் கூறுகையில், 'அந்த நாற்காலியில் அமர்வதற்கு கூட எனக்கு மனமில்லை. இருந்தாலும் நெருப்பின் மீது உட்காருவதுபோல் அந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன்' என்று கூறியிருக்கிறார்.

    அடுத்து 'எங்கே வந்தீர்கள்? என்று மொரார்ஜி தேசாய் கேட்டிருக்கிறார். நிதி கேட்பதற்கு, என கலைஞர் கூறியிருக்கிறார். அப்போது மொரார்ஜி தேசாய், நிதி எங்கே கொட்டிக்கிடக்கிறது? என் வீட்டு தோட்டத்திலே பணம் காய்க்கும் மரமா இருக்கிறது, உனக்கு அறுத்து கொடுப்பதற்கு? என மீண்டும் சாடியிருக்கிறார்.

    அதுவரை பொறுமை காத்த கலைஞர் சொன்னாராம், பணம் காய்க்கும் மரமே உலகத்தில் கிடையாது, பிறகு உங்கள் தோட்டத்தில் எப்படியய்யா இருக்கும்? என்று கேட்டபொழுதுதான், இவரிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

    பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு, குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கருணாநிதியால்தான் முடியும் என்று இந்தியாவே ஒப்புக்கொண்டு போனது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
    • கலைஞர் தன் வாழ்நாளில் எழுதி இருக்கும் இன்னும் பல்லாயிரம் பக்கங்களுக்கு நடுவே இவை ஒரு பகுதிதான்.

    சென்னை:

    விருதுநகரில் வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன.

    இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார்.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    1968 தொடங்கி 2018 வரையில் கலைஞர், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை பதிப்பகத்தில் உரிமையாளர் கவுரா ராஜசேகரன் புதுப்பித்து உள்ளார்.

    21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன.

    கலைஞர் தன் வாழ்நாளில் எழுதி இருக்கும் இன்னும் பல்லாயிரம் பக்கங்களுக்கு நடுவே இவை ஒரு பகுதிதான். அத்தனையும் செய்திகள். அன்றாடம் அரசியல் பற்றிய விமர்சனங்கள், கட்சிக்குள்ளும், வெளியிலும் நடைபெற்ற செய்திகள் பற்றிய விளக்கங்கள்.

    சுருக்கமாக சொன்னால் அந்நூல்கள் கலைஞரின் அரை நூற்றாண்டு ஆவணங்கள்.

    வரும் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று விருதுநகரில் நடைபெற இருக்கும் தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார்.

    • தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.
    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் ஆகும்.

    சென்னை:

    மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 'கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்-அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தில் அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அரசு விளம்பரங்கள், இணையதளங்களில் பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் ஆகும்.

    இதுபோன்று மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது வரலாற்றை திரிப்பதுடன், மற்ற முதல்-அமைச்சர்கள் பங்களிப்பை மறைமுகமாக குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடும் என்பதால், அரசு இணையதளங்களில் கருணாநிதி புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் மற்றும் சட்டப்படி அனுமதிக்கப்படாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தமிழில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது.
    • திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவுகள் பெறப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் நினைவிடத்தின் முகப்பு அமைகிறது. நினைவிடத்தின் பின்புறம் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் பாலத்தில் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

    கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 134 அடி உயரத்துக்கு இந்த பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவுகள் பெறப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மாநில அளவில் அனுமதி வழங்கினால் மட்டும் போதாது என்பதால் மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைக்க மாநில ஆணையம் பரிந்துரைத்தது.

    இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசர கால செயல் திட்டம் போன்றவற்றை தயார் செய்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி அதன் பிறகு மத்திய அரசிடம் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கடலோர ஒழுங்கு முறை மண்டல மேலாண்மை ஆணைய வல்லுனர்கள் அடங்கிய மதிப்பீட்டு குழு கூட்டம் 'ஆன்லைன்' வாயிலாக நேற்று நடந்தது.

    இதில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பம் ஆய்வுசெய்யப்பட்டது.

    அப்போது 14 பேர் அடங்கிய வல்லுனர் குழு இந்த திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தது. இந்த குழு விரைவில் பரிந்துரை அளிக்க உள்ளது.

    நிபந்தனைகளை விதித்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய ஆணையம் முடிவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆரம்ப கட்ட அனுமதிகள் கிடைத்து விடும் என தெரிகிறது.

    • பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார்.
    • இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை கெம்பட்டி காலனியில் இந்து மக்கள் கட்சியின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அக்கட்சியின் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கடந்த 7-ந்தேதி வீடியோ வெளியிட்டனர்.

    இது குறித்து பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது .இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11 -வது வார்டு கவுன்சிலர் தயாளன்வினோஜ்குமார் , ஒன்றிய பிரதிநிதி சண்முகம், எழிலரசன் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பாலு, ஆறுமுகம், பழனிச்சாமி, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் மங்கலம் தி.மு.க. கட்சியை சேர்ந்த தம்பணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சகாப்தீன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரிஸ், ஒன்றிய பொறுப்புகுழு பாபு, நீலி,ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் முருகசாமி, சுல்தான்பேட்டை ஆதி திராவிடர் காலனி கிளை செயலாளர் கிட்டான் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் கருணாநிதி படத்திற்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
    • ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள முகவூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

    முகவூர் ஊராட்சி, காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி பேரூராட்சி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலையில் தி.மு.க நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் கருணாநிதி படத்திற்கும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தி.மு.க நிர்வாகிகளுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய, நகர, துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனாகுழந்தைவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
    • கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அமைதி பேரணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து கருணாநிதியின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் ஏந்தியபடி புறப்பட்ட பேரணியானது பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் ராஜா எம்.எல்.ஏ., தொழில் அதிபர் ஆ.கே.காளிதாசன் ஆலடி எழில்வாணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றியச் செயலாளர்கள் சீனிதுரை, சிவன் பாண்டியன், அழகுசுந்தரம் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், கிளை, வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அண்ணா சிலை முன்பு கருணாநிதியின் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்னண்,கவுன்சிலர்கள் ராமதாஸ், விஜயக்குமார், ஆறு சரவணன், கார்த்திகேயன், சி.எல். சரவணன், மதியழகன், ஜெயகாந்தன், ராமநாதன், வீரகாளை, நிர்வாகிகள் வைரமணி, வக்கீல் ராஜஅமுதன், மகேந்திரன், கண்மணி, முத்து மணி, கார்த்திக், பாஸ்கரன், மீனாட்சி தனசேகர், ஆனந்த், திருநாவுக்கரசர், தமிழரசன், ஆர்.டி.சேகர், சேது, சேகர், அதியமான், தேவஸ்தானம் முருகேசன், மதி, சுக்ரா சரவணன், மணி, ராஜேந்திரன், கதிர் காமநாதன், மனோ, முனியராஜ், தமறாக்கி ஆறுமுகம், அழகுராஜா, கிரி, மகளிரணி மஞ்சுளா, தெற்கு ஒன்றிய இளைஞரணி தங்கசெல்வம், தொழில்நுட்ப பிரிவு வேங்கை பிரபாகரன், பூமிராஜ், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதனையடுத்து அங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மவுன ஊர்வலமாக வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு, மத்திய கொடி கம்பம் வழியாக அரண்மனையை வந்தடைந்தனர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதி படத்திற்கு காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அனைவரும் ஒன்று கூடி கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் தி.மு.க. செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான.கார்மேகம், இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் அமைச்சர்கள் சுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி.

    முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளர் ஹமீது சுல்தான், மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் அகமது, கவுன்சிலர்கள் சுகைபு, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×