search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    • 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு காலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கு பரிசுத்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
    • 10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என்.நேருவும், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் தொடங்கி வைக்கிறார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நினைவு தினத்தையொட்டி மாரத்தான் ஓட்ட போட்டிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டிக்கான பெயர் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. மொத்தம் 41 ஆயிரத்து 858 பேர் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் 31 ஆயிரத்து 295 பேர் ஆண்கள், 10 ஆயிரத்து 563 பேர் பெண்கள் ஆவார்கள்.

    ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, செசல்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, இங்கிலாந்து உள்பட 9 வெளிநாடுகளை சேர்ந்த 86 பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறார்கள்.

    நாளை மறுநாள் (7-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளி முன்பிருந்து 42.2 கிலோ மீட்டர் தூர போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு காலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கும் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என்.நேருவும், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் தொடங்கி வைக்கிறார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்று ஓடும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சீருடை பனியன், கழுத்துப்பட்டைகள் வழங்குவது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்காக தனித்தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த கவுண்டர்கள் திறந்து இருக்கும். பெயர் பதிவு செய்துள்ளவர்கள் பனியன் மற்றும் கழுத்து பட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் பனியன்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திருவிழா கூட்டம் போல் வீரர்கள் திரண்டு இருப்பதால் உற்சாகப்படுத்த காலை முதல் மாலை வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்த போட்டி தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    பெசன்ட்நகரில் இருந்து மெரினா கண்ணகி சிலை அருகே திரும்பி மீண்டும் பெசன்ட்நகர் நோக்கி ஓடுவார்கள். வழிநெடுக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 10 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் சில நிகழ்ச்சிகள் இதுவரை நகரை பார்த்திராத கலை குழுவினர் நடத்துகிறார்கள்.

    திருவண்ணாமலை பெரிய மேளம், காரமடை துடும்பாட்டம், திருப்பத்தூர் பம்பை, ராமநாதபுரம் ஜிம்பலா மேளம், சேலம் முரசு மேளம், அலங்காநல்லூர் வேலா ஆசான் பறையாட்டம், நெல்லை உறுமி மேளம் மற்றும் நையாண்டி மேளம் இவை நடைபெறும்.

    அனைவருக்கும் பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். வழிநெடுக களைப்பு போக்க தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் வழங்கப்படும். 200 டாக்டர்கள் பிசியோதெரப்பிஸ்டுகள், நர்சுகள், 15 ஆம்புலன்சுகள் வழி நெடுக அவசர உதவிக்காக நிறுத்தப்பட்டிருக்கும்.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, 20 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்கிறார்கள். ராணுவ மற்றும் கடற்படை வீரர்களும் ஓடுகிறார்கள்.

    காலை 8 மணிக்கு பரிசளிப்பு விழா பெசன்ட் நகரில் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார். இந்த போட்டி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சான்றிதழையும் முதல்-அமைச்சரிடம் வழங்குகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு தூதர்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம்.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:-

    எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே!

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கும் முழுப் பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.

    நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. அவரா? நம்மை விட்டுப் பிரிவதா? கணப்போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர்தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது. ஆம். தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார்.

    நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார். உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான இயங்கு சக்தியாக விளங்குகிறார்.

    பேரறிஞர் அண்ணா மறைந்தபிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு கழகத்தின் சார்பில் பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தி அதனை வழிநடத்திச் செல்வது நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் வழக்கம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் இதனைத் தலைவர் கலைஞர் கடைப்பிடித்தார்.

    அண்ணா வழியில் அன்றாடம் பயணித்த தலைவர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், வங்கக் கடற்கரையில் தனது தங்கத் தலைவர் பேரறிஞர் அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே நிரந்தர ஓய்வு கொள்ளும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்திற்கு அவரது முதலாமாண்டு நினைவு நாளில் உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கொரோனா கால நடைமுறைகள் காரணமாக நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமலே போய்விட்டது.

    "உடன்பிறப்பே.. எத்தனை ஆண்டுகள்தான் எதிர்க்கட்சியாக என்னை நோக்கி ஊர்வலமாக வருவாய்? நான் மறைந்தாலும் திராவிடப் பேரியக்கமாம் தி.மு.கழகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றி பெற்று ஆளுங்கட்சியாகி ஆட்சி அமைத்து, மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றி, இந்திய அளவில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்திவிட்டு வா உடன்பிறப்பே" என்று நம் தலைவர் கலைஞர் நினைத்தார் போலும்!

    அவர் நினைப்பதை, நினைத்தபடி நிறைவேற்றி முடிப்பதுதானே அவரது அன்பு உடன்பிறப்புகளான நமது தலையாய கடமை.

    உடன்பிறப்புகளாகிய உங்களில் நானும் ஒருவன் என்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி, மக்களின் அன்புடனும் ஆதரவுடனும் தி.மு.கழகத்தை ஆட்சியில் அமரவைத்து, 10 ஆண்டுகளாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை உதயசூரியனால் விடியச் செய்து, பல்வேறு துறைகளிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர வைத்து, அத்தகைய வெற்றியையும் சாதனைகளையும் பேரணியாகச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளில் அமையவிருக்கிறது.

    ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலையிலிருந்து தொடங்கி, பேரறிஞர் அண்ணா துயிலுமிடம் அருகே தலைவர் கலைஞர் ஓய்வெடுக்கும் நினைவிடம் வரை ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெறும் பேரணியில் கழகத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கழக முன்னணியினரும் கழகத்தின் ரத்தநாளங்களாக-ஆணிவேர்களாகத் திகழும் உடன்பிறப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்க இருப்பதை சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் இணைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

    தலைநகர் சென்னையில் மட்டும்தானா அமைதிப் பேரணி? தமிழ்நாடு முழுவதும் எத்திசையிலும் புகழ் மணக்கும் தலைவரன்றோ முத்தமிழறிஞர் கலைஞர்! அதனால், உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரோட்டமான திருவுருவச் சிலை அமைந்துள்ள ஊர்களில் கழகத்தினர் மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம். இனிமேல் சிலை அமைய இருக்கும் ஊர்களில், கழக அலுவலகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் புகழ் வணக்கம் செலுத்திடலாம்.

    "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற உணர்வினைத் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியிருக்கிறார்.

    தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும்-மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் அமையட்டும். கடல் அலை போல எழும் "வாழ்க வாழ்க வாழ்கவே.. தலைவர் கலைஞர் வாழ்கவே" என்ற முழக்கம், வானம் அதிரும் வகையில் ஒலிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.80 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு(42 மீட்டர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும்.

    கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பிலான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்படும்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அதாவது 40.5 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் மெரினா கடலில் அமையும் பேனா நினைவு சின்னம் திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரம் கொண்டதாக 134 அடியில் அதாவது 42 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட உள்ளது. கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது.

    மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவு சின்னம் கட்டி வருகிறது.

    அதேபோல் மெரினாவில் வங்க கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    எழுத்தாற்றல் மிக்கவரான கருணாநிதி பல நூல்களை எழுதியவர். அவர் தமிழுக்கு, இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நினைவு சின்னம் வங்க கடலில் அமையும் போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

     மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் இந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் 25 பள்ளி மாணவ, மாணவிகள் பரிந்துரை செய்யப்பெற்று மதுரை வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை யாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாண வர்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது.

    சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்பு கள், போட்டி யின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னி லையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்க ப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசாக ரூ.5,000-மும், 2-ம் பரிசாக ரூ.3,000-மும், 3-ம் பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
    • கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டது.

    ஆனால் சிலை வைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருணாநிதி சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக டி.என்.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே சிலை வைப்பதற்காக நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்ற பின்பே சிலை நிறுவ வேண்டும் என்று கூறிவிட்டார்.

    தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளதால் அடுத்த மாதம் 4-ந் தேதி காலை ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, நிறைவேறிய திட்டங்களை திறந்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாலை கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பின்னர் 5-ந் தேதி ஈரோட்டில் புத்தக திருவிழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா மட்டுமில்லை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும். குருநாதசாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை பொரு த்தவரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் கலந்து முடிவு செய்யப்படும்.

    இந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்திற்கு அடுத்த மாதம் 1 அல்லது 15-ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய தி.மு..க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும்.
    • படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழ்நாடு அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது.

    நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி மனித நேயக் கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்கான ஒரு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

    2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.

    இங்கே சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதி பேசுகின்றபோது கூட, ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அதே போல பாராளுமன்ற உறுப்பினரும் காரில் வரும்போது என்னிடத்தில் எடுத்துச் சொன்னார். ஆக, இந்த கோரிக்கை வைத்ததோடு மட்டும் நீங்கள் விட்டுவிடக் கூடாது, உங்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி இருக்கிறது. எனவே நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதிமாறனையும், சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

    பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.

    அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

    50 விழுக்காடுதான் இடஒதுக்கீடு என்று சொன்னாலும், நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இன்றைக்கு 56 விழுக்காடு பெண்கள் அந்தப் பொறுப்புகளை அடைந்திருக்கிறார்கள்.

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் கூறினார்.
    • டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது . நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் , நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் , நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெண்கல உருவ சிலை சொந்த செலவில் அமைப்பதற்கு அரசு அனுமதிகோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் . கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ஆனந்தராஜ் ( சுயே ):-நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலையுடன் , டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பன்னீர்செல்வம் (1 -வது வார்டு) விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்:- இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார் . இக்பால் ( ம.ம.க ):- எங்கள் 8 - வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் , கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . முத்தமிழன் ( தி.மு.க ):- ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் எங்கள் சரவண புரம் பகுதியில் வருவதற்கு சிரமமாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    சத்யா ( சுயே ):- ராமு வீதியில் சாலை பணி தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புனிதவதி ( அ.தி.மு.க ):- நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 , 10 , 11 ஆகிய வார்டுகளில் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாருக் உசேன் ( சுயே ) - நெல்லிக்குப்பம் நகராட்சியில் துப்புரவு பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மலையான் ( அ.தி.மு.க ) எங்களது 12 - வது வார்டில் சமுதாய கழிப்பறை சீர்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர் . இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் , பொறியாளர் பாண்டு , இளநிலை உதவியாளர் பாபு மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் . முன்னதாக நகராட்சி மேலாளர் அண்ணாதுரை , துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .

    • மேயர் மகேஷ் அறிவிப்பு
    • சுப. வீரபாண்டியன் பேசுகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பென்னப்ப நாடார் திடலில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் எனது(மகேஷ்) தலைமையில் நடைபெறும்.

    இதில் சிறப்பு பேச்சாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளும்,அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

    • வரலாற்றில் தவிர்க்க முடியாத தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி என்று தமிழ் அமைப்புகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
    • பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

    திருச்சி:

    பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், பைந்தமிழியக்கம் மற்றும் திருச்சி தமிழமைப்புகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் வழக்கறிஞர் சகாபுதீன் தலைமை தாங்கினார்.

    செயலர் நொச்சியம் சண்முகநாதன் வரவேற்றார். கி.ஆ.பெ.வி.கதிரேசன் முன்னிலை வகித்தார். தனியார் விடுதி முதல்வர் பாரிவள்ளல் முன்னிலை வகித்துக் கருணாநிதியின் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்து மாலை அணிவித்தார்.

    பேராசிரியர் முனைவர் ப.சுப்பிரமணியன், முனைவர் கடவூர் மணிமாறன், பைந்தமிழியக்க இயக்குநர் புலவர் பழ.தமிழாளன், கோவிந்தம்மாள் தமிழ்மன்றத் தலைவர் தமிழ்ச்செம்மல் கோவிந்த சாமி, பேராசிரியர் முனைவர் செயலாபதி, பாவலர் ராசு நாச்சிமுத்து, பன்னாட்டு தமிழுறவு மன்றத்துணைச்செயலர் நிஜவீரப்பா, முனைவர் அசோகன், ஆகியோர் கருணாநிதியின் பன்முகத்திறனைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

    பைந்தமிழியக்கத் துணைத்தலைவர் பாவலர் வேல்முருகன், பாவலர் செல்வராசன், பாவலர் சந்திரசேகரன் ஆகியோர் கலைஞரின் பண்பைப் பாவடித்துப் பாடினர். தமிழ்ப்பணி ஆசிரியர் வா.மு.சே.திருவள்ளுவர் பேசுகையில், இந்திய ஒன்றியத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத தனிமுத்திரை பதித்தவரே முத்தமிழறிஞர் கலைஞர். மியான்மரில் திருவள்ளுவருக்கு சிலை வடித்துத் திறந்து வைத்த செம்மல்.

    தமிழுக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் அரணாகத் திகழ்ந்தவர். அவர் சென்ற வழியில் நாம் அனைவரும் தடம் மாறாமல் செல்வதே கலைஞருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. அரசிற்கும் தமிழினமே ஒன்றுபட்டு நிற்க உறுதியெடுப்பதே நம் பிறவிக் கடனாம் என்றார். நிறைவில் பாவலர் க.மாரிமுத்து நன்றி கூறினார்.

    இந்நிகழ்வில் புலவர் தியாகராசன், பாலமுருகன், புலவர் பழனியாண்டி, அறிவியல் அறிஞர் தங்கவேலு, பானுமதி, பார்த்திபன், மகேந்திரன், சின்னதுரை, கனராசு, மணி உட்பட தமிழறிஞர்களும் தமிழ்ப்பற்றாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    • கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஆட்டுக்குட்டிகள், தையல் எந்திரம் மற்றும் அரிசி பைகள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 100 பேருக்கு ஆடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு 100 பேருக்கு ஆட்டுக்குட்டிகள், தையல் எந்திரம் மற்றும் அரிசி பைகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்ட இயக்க நிர்வாகிகள் விசுவை சந்திரன், ஸ்ரீ ரெங்கநாயகி, கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் “குறளோவியரின் புகழரங்கம்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
    • பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா "வேருக்கு விழா" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் "குறளோவியரின் புகழரங்கம்" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. கே.ஜார்ஜ்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், சரிதா மகேஷ்குமார், தேவஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர் செல்வம், எம்.தாவுத்பீ, துரைகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ந.பொன்முடி நன்றி கூறினார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. #KarunanidhiStatue
    சென்னை:

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமலும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதி செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் கஜா புயல் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அங்கு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேரப்போவதாக நேற்று மாலை தகவல்கள் பரவியது.

    காங்கிரஸ் கட்சியோடு இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டதாகவும், கமல் 5 தொகுதிகளை கேட்டு இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் கமல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×