search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்க ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

    இந்நிலையில், 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    உடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம், சிஐடி காலனி, ராஜாஜி ஹால் ஆகிய இடங்களில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவு 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு இரவு 1 மணி வரையிலும், அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    உடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் அடக்கம் செய்ய மெரினா கடற்கரைக்கு பதிலாக மாற்று இடம் ஏற்பாடு செய்ய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவில் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படுகிறது. நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாகவும் துரை முருகன் தெரிவித்தார்.

    இந்நிலையில், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், திமுகவினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #கலைஞர்
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் நீங்கா புகழை என்றெண்டும் நிலைத்திருக்க வேண்டும் எனவும், திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த துயர சூழலில் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படலாம் அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது வளரும் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். 

    இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. 

    கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசொலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். 



    கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, 1953-ம் ஆண்டு கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. 

    தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் ரெயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரெயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்

    1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் மத்தியஅரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957-ம் ஆண்டு அக்டோபரில் அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. 



    1963-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று ஐகோர்ட் உத்தரவால் விடுவிக்கப்பட்டனர்.

    1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

    1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிய பிடித்தது. தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

    1969 - 1971, 1971 - 1976, 1989 - 1991, 1996 - 2001, 2006 - 2011  ஆகிய ஆண்டுகளில் அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார். இன்றளவும் பெருமையாக கூறக்கூடிய, இன்றைய தேதியிலும் மற்ற மாநிலங்கள் கொண்டு வராத பல முற்போக்கு, முன்னேற்ற திட்டங்களை அவர் தனது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தினார். 
    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். 
    திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #Karunanidhi #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

    சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.  இந்நிலையில் 27.07.2018  அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

    இதையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள் என தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் தொண்டர்களுக்கு தெம்பூட்டும் விதமாக இருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்திக்கும் போது வெளியான புகைப்படங்களும் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

    இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். 

    மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கவலை அளிக்கும் அறிக்கை வெளியானதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால், அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



    கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர். திமுக நிர்வாகிகளும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஒருவித குழப்பமான சூழல் அங்கு ஏற்பட்டது. 

    இரவு முழுவதும் அவர் உடல்நிலை குறித்து எந்த தகவல்களும் வராததால் தொண்டர்கள் கவலை அடைந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியானது.

    பிற்பகலில், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதே நேரத்தில், காவேரி மருத்துவமனை வளாகத்தில் மூன்று இணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவமனை வளாகத்தை காவல் துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனினும், உறுதி குலையாத தொண்டர்கள் எழுந்து வா தலைவா என குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். 

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6.10 மணிக்கு காலமானதாக மருத்துவ அறிக்கை வெளியானது. 

    திமுக தலைவரின் மறைவை ஏற்க முடியாத தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாளாமல் தவித்து வருகின்றனர். 

    #dmk #karunanidhi #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், இன்று மாலை முதல் நாளை திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #DMK
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி கோபாலபுரம் இல்லம் வந்துள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KalaignarHealth
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி ஆகியோர் கண்ணீருடன் கோபாலபுரம் வந்தடைந்தனர்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக வெளியான அறிக்கையால், கவலை அடைந்த தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக காவேரி மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    காவேரி மருத்துவமனைக்கு வெளியே பலர் கதறி அழுந்த நிலையில், எழுந்து வா தலைவா என கண்ணீர் மல்க நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மருத்துவ அறிக்கை வெளியானதை அடுத்து, பலர் கோபாலபுரம் இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×