search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் அணிவகுக்கப்பட்டுள்ளனர். 

    மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் போலிசார்களை வரவழைத்து பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இரவு முழுதும் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கவணித்துக்கொண்ட கனிமொழி இன்று காலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டார். #Karunanidhi #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக இன்றுடன் 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் முக்கிய உடலுறுப்புக்களை செயல்பட வைப்பது சவாலாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட 6-வது அறிக்கையில் தெரிவித்தது.

    இதனால் , திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்பட்டு அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள மருத்துவனையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

    ஆனால், ஸ்டாலின், கனிமொழி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் நேற்று இரவு 10 மணியளவில், மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

    இருப்பினும், புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே கனிமொழி மீண்டும் காவேரி  மருத்துவமனைக்கு வந்தார்.

    இந்ந்நிலையில், நேற்றிரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருந்து  கருணாநிதியின் உடல்நிலையை கவணித்துக்கொண்ட கனிமொழி இன்று காலை அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.  கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
     #Karunanidhi #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    கருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக  இன்றுடன் 11 நாட்களாக  ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என காவேரி மருத்துவமனை வெளியிட்ட ஆரம்பகட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா காவேரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். அவர், காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவக்குழுவினர், அவருக்கு தினந்தோறும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக அவரின் முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாக தெரிவித்தது.

    இதனால், பதற்றமடைந்த திமுக தொண்டர்கள் கருணநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வர தொடங்கியதால் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.



    கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் மற்றும் அவரது மகள் கனிமொழி நேற்றிரவு முழுவதும் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்து கருணாநிதியின் உடல்நலத்தை கவனித்து வருகின்றனர்.

    கருணாநிதி நலம்பெற்று நிச்சயம் நல்ல உடல்நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு தாங்கள் இருப்பதாக ஊடகங்களிடம் கூறிய திமுக தொண்டர்கள் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிறவு தாண்டி விடிய விடிய மருத்துவமனையின் முன்பு கால்கடுக்க காத்திருக்கின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

    மேலும், பிறவியிலேயே போராளியான கருணாநிதி, தன் வாழ்க்கை முழுக்க சந்தித்த பல போராட்டங்களையும் ஏணிப்படிகளாய் மாற்றி உச்சம் தொட்டவர். அவர், விரைவில் தொண்டர்களை பார்த்து கையசைப்பார், அவர் பூரண நலம் பெற்று விரைவில் கோபாலபுரம் இல்லம் செல்வார் என மருத்துவமனை முன்பு குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுக்க பரபரப்பாக காணப்படுகிறது.

    மேலும், அதிகப்படியான தொண்டர்கள் குவிந்துள்ளதால், அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திடாமல் இருக்கும் வகையில் காவேரி மருத்துவமனை முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை :

    சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

    இதைத்தொடர்ந்து, அன்று நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன.

    இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பின்னர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்ற நிலையில் கனிமொழி மற்றும் பொன்முடி ஆகியோர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

    தொண்டர்கள் அதிகரிப்பால் அந்தப் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து, காவல் துணை ஆணையர்களுடன் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார். மேலும் காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.                         

    இந்நிலையில், மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.

    இதில், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கமிஷ்னரருடனான ஆலோசனைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

    இதற்கிடையே, காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    மேலும்,  அதிகப்படியான தொண்டர்கள் குவிந்துள்ளதால், அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திடாமல் இருக்கும் வகையில் காவேரி மருத்துவமனை முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்ற கனிமொழி மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.#Karunanidhi #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

    இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் 10 மணியளவில், மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மீண்டும் மருத்துவமனைக்கு  வந்துள்ளார். அவருடன், திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

    இதற்கிடையே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Karunanidhi #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ள நிலையில், ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். #KarunanidhiHealth #DMK #MKStalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ளதாக மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவரும் கருணாநிதியின் மகனுமாகிய முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, துரை முருகன், அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர். 

    இதற்கிடையே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #PresidentKovind
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராகுல் காந்தி காந்தி ஆகியோர் மட்டும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். மற்ற தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திராவில் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    பின்னர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி கைகளை காட்டினார். பின்னர் காரில் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

    இது தொடர்பாக ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளதாவது:-


    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #KauveryHospital
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.

    அவ்வாறு கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு நபர்களுக்கும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.  

    இந்நிலையில், காவேரி மருத்துவமனியில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிகிறது. ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்தார். #Karunanidhi #KauveryHospital
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்த கமல்ஹாசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #KamalHaasan
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

    கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கமல்ஹாசன் உடல்நிலை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாதாக முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார். 
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி நூறாண்டுகள் வரை நலமுடன் வாழ்வார்” என கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். #Karunanidhi #KarunanidhiHealth #RajiniKanth
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். 

    வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

    சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், “இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கருணாநிதி. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறினார்.

    முன்னதாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×