search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடீசுவரர்கள்"

    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Rajasthan #MultiMillionaire
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 158 பேர் கோடீசுவரர்கள். இதில் காங்கிரஸ் தலைவர்கள் ப்ரஸ்ராம் மோர்டியா ரூ.172 கோடியும், உதய்லால் அஞ்சனா ரூ.107 கோடியும், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்கேஷ் மீனா ரூ.39 கோடியும் உள்ளதாக வருமான வரி கணக்கில் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்றத்தில் 145 பேர் கோடீசுவரர்களாக இருந்தனர்.

    59 எம்.எல்.ஏ.க்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், 129 எம்.எல்.ஏ.க்கள் பட்டம் மற்றும் முதுநிலை பட்டமும் படித்துள்ளனர். 7 பேர் எழுத, படிக்க மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளனர். மொத்தம் 23 பெண் எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். 46 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன. இவர்களில் 28 பேர் மீது தீவிரமான குற்றவழக்குகள் உள்ளன. பர்சாடிலால் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கு உள்ளது. #Rajasthan #MultiMillionaire
    ஜி.எஸ்.டி. பாதிப்பையும் மீறி இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. #GST #DollarMillionaries
    மும்பை:

    இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘கேப்கெமினி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்களின் சொத்து மதிப்பும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 லட்சம் கோடியாகும். இதே காலகட்டத்தில் உலக அளவில் உயர்ந்த கோடீசுவரர்கள் எண்ணிக்கையின் சராசரி 11.2 சதவீதம் மட்டுமே.



    ஜி.எஸ்.டி. தாக்கத்தை மீறி, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஜி.எஸ்.டி. தாக்கம் தற்காலிகமானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘இந்தியா, உலகஅளவில் வேகமாக வளரும் சந்தை’ என்றும் அது கூறுகிறது. கடந்த ஆண்டு சந்தை மூலதனத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்வு ஏற்பட்டதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நிலங்களின் மதிப்பு உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை இதர காரணங்கள் ஆகும். 
    ×