என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 143344
நீங்கள் தேடியது "ஒபாமா"
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Texasjudge #Obamacare
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA) என்ற திட்டத்தை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டம் பரவலாக ‘ஒபாமாகேர்’ திட்டம் என்று அந்நாட்டவர்களால் அழைக்கப்படுகிறது. சுமார் 5 கோடி மக்கள் பலனடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்தும் இதுதொடர்பாக ஒபாமா அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்
இந்த சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டில் தீர்ப்பளித்திருந்தது.
ஒபாமாவுக்கு பின்னர் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற பின்னர் முதல் வேலையாக இந்த ஒபாமாகேர் திட்டத்தை ஒழிப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஒபாமாகேர் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது, செல்லத்தக்கதல்ல என தீர்ப்பளித்துள்ளார்.
இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி ரீட் ஓ கான்னோர் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு மிக உயர்வான செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Texasjudge #Obamacare
குடியேறிகளை தடுப்பதாக கூறி எல்லைப்பகுதியில் 5 ஆயிரம் ராணுவத்தினரை குவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அரசியல் ஸ்டன்ட்’ அடிப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
எல் சவடோர், ஹோன்டுராஸ், குவட்டெமலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதற்காக மெக்சிகோ நாட்டின் வழியாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை 'அரசியல் ஸ்டன்ட்’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவை நோக்கி அடைக்கலத்துக்காக வரும் ஏழை அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக தற்போது அரசு கூறுகிறது.
கைகளில் குழந்தைகளுடன் பலநூறு மைல்கள் நடந்துவரும் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நமது வீரம்மிக்க ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரத்தில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் இவர்களின் அரசியல் ஸ்டன்ட்டுக்காக எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவா நாட்டுப்பற்று? இது நாட்டுப்பற்றில்லை. வெறும் அரசியல் ஸ்டன்ட் மட்டும்தான்.
தேர்தல்கள் வரும் காலத்தில் இதுபோல் பேசுவதும், தேர்தலுக்கு பின்னர் இதை எல்லாம் மறந்து விடுவதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.
இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI

நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
நியூயார்க்:
அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் அந்நாட்டின் மிகப்பிரபலமான ‘சி.என்.என்.’ செய்தி தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.
டைம் வார்னர் சென்டர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்துக்கு இன்று சந்தேகத்துக்குரிய மர்ம பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தங்களது செய்தி ஒளிபரப்பின்போது ஒரு அறிவிப்பை ‘சி.என்.என்.’ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவரசமாக வெளியேறினர்.
இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் வெடிப்பொருள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி நிலையத்துக்கு உளவுத்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர். #CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
×

X