என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜாபர்கான்பேட்டை"
போரூர், டிச. 15-
எம்.ஜி.ஆர்.நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர் அருகே நேற்று அதிகாலை சப்-இன்ஸ் பெக்டர் வீரமணி, ஏட்டு ஜான் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தினார்கள். அதில் இருந்த தி.நகர் தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், மீனம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சார்லஸ் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் வந்த காருக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. போலியான நம்பர் பிளேட் பொருத்தி காரை ஓட்டி வந்தது தெரிந்தது.
உடனடியாக 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்துஇரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணை யில் இருவரும் கார்களை திருடி என்ஜின் நம்பர், சேஸ் நபர்களை அழித்து விட்டு போலியாக நம்பர் பிளேட் பொருத்தி கார்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை ஜாபர்கான் பேட்டையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடை விற்பனையாளர் மதன் மோகன் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.
வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.
அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்