search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பின்னணி"

    தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. #Telangana #MLA #CriminalRecord
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சிந்தனை சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

    இவர்களில், 47 பேர், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சட்டசபையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது.

    ஆனால், நடப்பு சட்டசபையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. காங்கிரசை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். #Telangana #MLA #CriminalRecord
    குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியாவில் குற்றப்பின்னணி உள்ளவர்களே அதிகம் தேர்தலில் நிறுத்தப்படுவதாகவும், அவர்களையே மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் நிலை இருப்பதாக, குற்றப்பின்னணி இருக்கும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்யாமல், அரசியல் கட்சிகள் அடிப்படை நாகரீகத்தை பேண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், அரசியலில் முறைகேடும், ஊழலும் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும், அந்த இடத்தில் உச்சநீதிமன்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

    அதேபோல், நாடாளுமன்றம் மட்டுமே சட்டதிருத்தம் மூலம் இதற்கான தீர்வை கொண்டு வர முடியும் எனவும் வழிவகையினை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. #SupremeCourt
    ×