search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவாஜா"

    எப்படி நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை ஆஸி. பேட்ஸ்மேன்கள் புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்தியா விரைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது, புஜாரா அணியை சரிவில் இருந்து மீட்டார். 246 பந்துகள் சந்தித்து 123 ரன்கள் அடிக்க இந்தியா 250 ரன்களை தொட்டது. 2-வது இன்னிங்சிலும் 200 பந்துகளுக்கு மேல் சந்தித்து அரைசதம் விளாசினார். இவரது ஆட்டத்தால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அவர்கள் எப்படி நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை புஜாராவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் ஆஸ்திரேலியா வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆன டீன் ஜோன்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘புஜாரா தனது ஆட்டத்தை எப்படி நகர்த்தி செல்கிறார் என்பதை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கவனிக்க வேண்டும். எனது அப்பா என்னிடம், ‘‘நீ ஐந்து மணி நேரம் பேட்டிங் செய்தால், சதம் உன்னைத்தேடி வரும்’’ என்பார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் அவசரப்படுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 6 பேரில் பெரும்பாலானோர் அனுபவம் இல்லாதவர்கள். உஸ்மான் மட்டும்தான் முதல்தர போட்டிகளில் 40-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்கள் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்கள்.

    சதம் எப்படி அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். புஜாராவை போல் எப்படி நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். நாதன் லயனை எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.



    பெர்த் ஆடுகளம் பந்தின் மீது சிராய்ப்பு ஏற்படும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும். அதேபோல் சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் குறித்து ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட்டிற்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள்.

    முகமது ஷமியும் சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்வார். இதனால் அவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். புதிய ஆடுகளம் பழைய வாகா பிட்ச் போன்று இருக்காது. ஸ்லோ டென்னிஸ் பால் பவுன்ஸ் இருக்கும்’’ என்றார்.
    எதிரணி பேட்ஸ்மேன் பந்தை சந்திக்க திணறுகின்றபோது எனக்கு சந்தோசமாக இருக்கும் என இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். #AUSvIND #RishabhPant
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இவர் விக்கெட் கீப்பராக செயல்படும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை சீண்டினார்.

    முதல் இன்னிங்சில் ‘‘இங்கே யாரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ கவாஜாவை பார்த்து கூறினார். இன்று 2-வது இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஒரு ஓவர் முழுவதும் கம்மின்ஸை கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.

    பேட் கம்மின்ஸ் பேட் செய்யும்போது ரிஷப் பந்த் ‘‘கம் ஆன் பேட் (Come on Pat), உங்களால் மோசமான பந்தை தூக்கி அடிக்க முடியாது, இங்கே விளையாடுவது மிகக்கடினம்’’எனக்கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.



    சாதனை மற்றும் இன்றைய ஆட்டம் குறித்து குறித்து கூறுகையில் ‘‘அவர்கள் இலக்கை நெருங்கி வரும்போது உண்மையிலேயே பதற்றமாக இருந்தது. ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முதல்முறையாக தொடக்க போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்திருப்பதில், எனது பங்கும் உள்ளது என்பதில் மகிழ்ச்சி.

    பேட்ஸ்மேன்களை சீண்டும்போது அவர்கள் என் மீது கவனம் செலுத்தி, பந்து வீச்சாளர்களை கவனிக்காமல் போவதை நான் விரும்புவேன்’’ என்றார்.
    அடிலெய்டு டெஸ்டில் அணியை காப்பாற்றும் வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா வீரர் கவாஜாவை ரிஷப் பந்த் கிண்டல் செய்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேஎல் ராகுல் (2), முரளி விஜய் (11), விராட் கோலி (3), ரகானே (13), ரோகித் சர்மா (37) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 86 ரன்னிற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. ஆனால் புஜாரா நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புஜாரா, 153 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் 231 பந்தில் சதம் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை திறமையான எதிர்கொண்டு அணியை காப்பாற்றினார். புஜாரா 123 ரன்கள் அடித்ததால் இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலயா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரின் துள்ளியமான பந்து வீச்சை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் திறமையாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது.



    இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். 125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கையுறையில் (Glove) உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.

    கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் ரிஷப் பந்த் ஸ்லெட்ஜிங்கை தொடங்கி வைத்துள்ளார். வரும் நாட்களில் இரு அணி வீரர்களும் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது.
    தீவிரவாத மிரட்டல் புகார் விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கவாஜாவின் சகோதரர் அர்சகான் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #Khawaja
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார். காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.

    கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.



    அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.

    இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்கள் குவிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும், உஸ்மான் கவாஜா அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்று முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவாஜா பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அவரது பேட்டிங் சாதனை அபாரமானது. இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மண்ணில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார்.



    விராட் கோலி கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் 692 ரன்கள் குவித்தார். இந்த முறை கவாஜா விராட் கோலியை முந்துவார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் ரன்கள் குவித்தார். இதனால் இந்த தொடரிலும் ரன்கள் குவிப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறப்பானதாகவே அமைந்தது.

    இரண்டு அணிகளின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை விட, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள்’’ என்றார்.
    சதம் அடித்து 300 பந்துகளை சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டை டிரா செய்ய உதவிய கவாஜாவை டிம் பெய்ன் பெரிய அளவில் புகழாரம் சூட்டியுள்ளார். #PAKvAUS
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 462 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா போராடி டிரா செய்தது. அந்த அணி 8 விக்கெட்டுக்கு 362 ரன் எடுத்தது.



    தொடக்க வீரர் கவாஜா (141 ரன்) சதம் அடித்து தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணி வீரர்களை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். கவாஜாவின் ஆட்டம் சிறந்த டெஸ்ட் இன்னிங்சில் ஒன்றாகும். அடுத்த டெஸ்டில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்றார். கவாஜா கூறும்போது, “ஆசிய கண்டத்தில் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவது என்பது சற்று வித்தியாசமானது. அதற்கு நிறைய மன தைரியம் வேண்டும்” என்றார்.
    கவாஜா மற்றும் டிம் பெய்ன் ஆகியோரின் அபார ஆட்டத்தில் பரபரப்பாக சென்ற துபாய் டெஸ்டை ஆஸ்திரேலியா டிரா செய்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

    280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிஞ்ச் 49 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்திலவ் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ் ஆகியோரை அப்பாஸ் அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    இதனால் ஆஸ்திரேலியா 87 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    டிராவிஸ் ஹெட்

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. 326 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக 7 விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கவாஜா, டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக ஓவர்களை கடத்துவதில் கவனம் செலுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஸ்சேக்னே 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். கவாஜா சிறப்பாக விளையாடி 224 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

    இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார்.

    கவாஜா ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் சற்று சரிந்தது. இதை மேலும் வலுவூட்டும் வகையில் மிட்செல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) ஆகியோரை அடுத்த ஓவரில் யாசிர் ஷா வெளியேற்றினார். இதனால் 12 ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது.


    யாசிர் ஷா

    அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்தை தடுத்தாடுவதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். ஒவ்வொரு ஓவராக குறைந்து இறுதியில் கடைசி ஓவரை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்தனர். யாசிர் ஷா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

    டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    ×