search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா"

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #India #Canada
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன் பிரித் கவுர் முதல் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இந்தியா 1- 0 என முன்னிலை வகித்தது. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 39வது நிமிடத்தில் கனடா அணியின் புளோரிஸ் வான் சன் ஒரு கோல் அடித்து தனது அணியை சமனிலைப்படுத்தினார்.

    அதன்பின்னர், இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். 46வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்லெங்சனா கஞ்சுகம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, 47 மற்றும் 57வது நிமிடத்தில் லலித் உபாத்யாயா 2 கோல்களை அடித்தார். மற்றொரு இந்திய வீரர் அமித் ரோதாஸ் 51 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    10 நிமிடங்களில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி 4 கோல்களை அடித்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.

    இறுதியில், இந்திய அணி கனடாவை 5 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. லலித் உபாத்யாயா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    சி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 5 - 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. #HockeyWorldCup2018 #India #Canada
    ×