search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின்"

    பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர். #MukeshAmbani #IshaAmbani #AnandPiramal #AmbaniDaughterPreWedding
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

    இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முதல் வரும் 10-ம் தேதி வரை அன்ன சேவை என்ற பெயரில், உணவு விருந்து நடைபெகிறது. தினமும் மூன்று வேளை தலா 5 ஆயிரத்து 100 பேருக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவ்வப்போது அம்பானி குடும்பத்தினரும் உணவு பரிமாறி வருகின்றனர்.

    இந்நிலையில், முகேஷ் அம்பானி மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய விருந்தினர்கள் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.

    மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவில் பங்கேற்க இன்று வருகை தந்துள்ளார்.

    பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், வித்யா பாலன், சித்தார்த் ராய், ஜான் ஆபிரகாம், பிரியா ருன்சால், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் உள்ளிட்ட பல்வேரு பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், தோனி மனைவி சாக்‌ஷி சிங் மற்றும் அவரது மகள் ஷீவா, ஜாகிர் கான் உள்ளிட்ட பலரும் வந்துள்ளனர்.

    மேலும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உபி முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்துள்ளனர். #MukeshAmbani #IshaAmbani #AnandPiramal #AmbaniDaughterPreWedding #sachin #aishwaryarai  #abhishekbachchan 
    123 இன்னிங்சில் 24 சதங்கள் விளாசி சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்து 2-வது இடம் பிடித்துள்ளார் விராட் கோலி. #INDvWI #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 149.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ஜடேஜா (100 அவுட் இல்லை) ஆகியோர் சதம் அடித்தனர். விராட் கோலி 184 பந்தில் 7 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது விராட் கோலிக்கு 24-வது சதமாகும்.

    இதன்மூலம் விரைவாக 24 சதம் அடித்து 2-வது இடத்தில் இருந்த சச்சின் தெண்டுல்கரை விராட் போலி பின்னுக்குத் தள்ளியுள்ளார். விராட் கோலிக்கு இது 72-வது டெஸ்ட் பேட்டியாகும். இதில் 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 8 நாட்அவுட் உடன் 24 சதம் விளாசியுள்ளார்.



    டான் பிராட்மேன் 66 இன்னிங்சில் 24 சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 125 இன்னிங்சில் அடித்து 3-வது இடத்திலும், கவாஸ்கர் 128 இன்னிங்சில் அடித்து 4-வது இடத்திலும், மேத்யூ ஹெய்டன் 132 இன்னிங்சில் அடித்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
    பிரபல கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பெரம்பலூர் அருகே தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. #SachinTendulkar

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் கோல்டன் சிட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோல்டன்சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நண்பர், பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு பழக்கமானவர். இதனால் அவர் மூலம், கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை மனுவுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கோல்டன் சிட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார்.

    அந்த நிதியின் மூலம் கோல்டன் சிட்டி பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், இந்த சாலையானது 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ. தடிமனிலும் வெட்மிக்ஸ் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டு அடுக்காக தார்ச்சாலை போடப்பட உள்ளது. இச்சாலை இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது, என்றார்.


    கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்த சச்சின் தெண்டுல்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். #SachinTendulkar #tamilnews

    ×