search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோனி"

    பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர். #MukeshAmbani #IshaAmbani #AnandPiramal #AmbaniDaughterPreWedding
    ஜெய்ப்பூர்:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

    இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முதல் வரும் 10-ம் தேதி வரை அன்ன சேவை என்ற பெயரில், உணவு விருந்து நடைபெகிறது. தினமும் மூன்று வேளை தலா 5 ஆயிரத்து 100 பேருக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவ்வப்போது அம்பானி குடும்பத்தினரும் உணவு பரிமாறி வருகின்றனர்.

    இந்நிலையில், முகேஷ் அம்பானி மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய விருந்தினர்கள் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.

    மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவில் பங்கேற்க இன்று வருகை தந்துள்ளார்.

    பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், வித்யா பாலன், சித்தார்த் ராய், ஜான் ஆபிரகாம், பிரியா ருன்சால், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் உள்ளிட்ட பல்வேரு பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

    இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், தோனி மனைவி சாக்‌ஷி சிங் மற்றும் அவரது மகள் ஷீவா, ஜாகிர் கான் உள்ளிட்ட பலரும் வந்துள்ளனர்.

    மேலும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உபி முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்துள்ளனர். #MukeshAmbani #IshaAmbani #AnandPiramal #AmbaniDaughterPreWedding #sachin #aishwaryarai  #abhishekbachchan 
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவன், தனது கனவு குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். #VigneshShivan
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். 

    அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவனும் தோனியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். தற்போது அவர் தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து பல்வேறு பதிவுகளைப் பதிவு செய்துள்ளார். 

    ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தோனியை சந்திப்பது எனது வாழ்நாள் கனவு. எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான மன நிறைவான நாள். இதற்கு காரணமான கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி. ஒருநாள் இவர் நம் நாட்டை வழிநடத்துவதைப் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன். இது என்னுடைய கனவு’ என தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் டோனி டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #MSDhoni #INDvWI #INDvAUS
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

    இந்த ஆறு டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    பா.ஜ.க.வின் சம்பர்க் ஸே சமர்த்தான் என்னும் “ஆதரவுக்கான தொடர்பு” திட்டத்தின்கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்தார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மே மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், பல்வேறு பிரபலங்களை பா.ஜ.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில்  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா  இன்று சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். 

    அவருடன் மத்திய மந்திரி பியுஷ் கோயலும் வந்திருந்தார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் தோனியுடன் உரையாற்றி, விடைபெற்று சென்றார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan 
    கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டோனி இந்திய கிரிக்கெட் அணியின் கல்தூண் என புகழ்மாலை சூட்டியுள்ளார். #Dhoni #IrfanPathan
    ஸ்ரீநகர்:

    இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இன்று தனியார் கல்லூரி ஒன்றில் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இர்பான் பதானிடம் அவர் விளையாடியபோது வழிநடத்திய சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இர்ஃபான் பதான், அனைத்து கேப்டன்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும், ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.



    மேலும், கங்குலி தலைமையில் விளையாடும் போது அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும், என்றென்றும் பாராட்டுக்குரிய வகையில் அவரது தலைமை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் கேப்டன் டோனியின் தலைமை போற்றுதலுக்கு உரியது என்றும், அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கல்தூண் எனவும் வர்ணித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய இர்ஃபான் பதான், தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் சிறப்பாக செயல்படுவதாகவும், அவர் புதிய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பது பாராட்டத்தக்க ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். #Dhoni #IrfanPathan
    ×