search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. அந்த ஆழ்வார்கள் யார் யாரென்று பார்ப்போமா?

    திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் என்பவர்களே இந்த பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இவர்களில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பதற்காக ரெங்கநாதரால் உருவாக்கப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழா என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து திருவாய்மொழி திருநாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது.

    • இன்று இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 12-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத் தலங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

    பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணி வரை காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான வருகிற 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலுக்கு வெளியே 92 சி.சி.டி.வி. கேமராக்களும் என மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    • இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

    பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (22-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது.

    இதையொட்டி நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

    இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.

    இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1-ந்தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    மறுநாள் (2-ந்தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
    • வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு.

    பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று இரவு (22-ந்தேதி) தொடங்குகிறது. நாளை (23-ந்தேதி) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.

    காலை 7.15 மணி முதல் மதியம் 11.30 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும்.

    இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங் காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான ஜனவரி 1-ந்தேதி, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    அன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    மறுநாள் (2-ந்தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந்தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழித்திருநாள் தொடங்குகிறது.

    அதன் பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் அனைத்து கோபுரங்கள் மற்றும் வீதிகளில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, இணை ஆணையர் சீ.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சொர்க்கவாசல் திறப்பு 2-ந்தேதி நடக்கிறது.
    • சொர்க்கவாசல் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம்மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார். காலை 7.15 மணி முதல் காலை 11.30 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர்.

    இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாளான நாளை மறுதினம் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (ஜனவரி1-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ஜனவரி 2-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 8-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 9-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 2-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 8-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • 23-ந்தேதி முதல் ஜனவரி 11-ந்தேதி வரை மூலவர் முத்தங்கி சேவை சாதிப்பார்.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.

    பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    திருநெடுந்தாண்டகம் திருவிழா நாட்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருளுகின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்யபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின்போது, தினமும் காலையில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் நம்பெருமாள் பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார்.

    வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி அன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து 7-ம் திருநாளான 8-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 9-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ராப்பத்து 10-ம் திருநாளான 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    இதையொட்டி கோவிலில் முக்கிய பகுதிகளில் வர்ணம் தீட்டும் பணி, வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • 150 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    • அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    இதேபோல் அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப் பெற்றன.

    அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இந்த வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

    இதையடுத்து இன்று (16-ந்தேதி) மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

    திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெற்றது.

    முதல் நாள் பூஜையின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

    • இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடக்கிறது.
    • நாளை பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது.

    உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நேற்று தாயார் சன்னதியில் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த சகஸ்ரதீப கூட்டு வழிபாட்டின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர்.

    • நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவர் நம்பெருமாள் காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கு நம்பெருமாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதைத்தொடர்ந்து சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படும் முன் கோவில் தங்க கொடிமரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, மரியாதை செய்யப்பட்டது.

    இதையடுத்து 2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன்பு 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே காத்திருந்தார். இதையடுத்து இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர் நந்தவனம் தோப்பு வழியாக தாயார் சன்னதிக்கு நம்பெருமாள் சென்றார். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றார். அங்கு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர்.
    • கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர்.

    இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறியபோது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவில் இரந்து விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது.
    • தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    கி.பி. 1320-ம் ஆண்டு நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அந்த கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.

    மேலும் திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரரெட்டி, சொர்ணலதாரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இதைத்ெதாடர்ந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதி உலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திர மரியாதையை கருட மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், உள்துறை கண்காணிப்பாளர் மோகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 8-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி அதனை கண்டருளுவார்.

    இதன்படி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தக் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    ×