search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர தினத்தையொட்டி திருமஞ்சனம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர தினத்தையொட்டி நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து, அதை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த புனிதநீரால் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்தனர்.

    மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார்.

    அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.

    பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த வசந்த உற்சவ திருவிழாவின் 7-ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டளுகிறார், 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இன்று பகல் பத்து முதல் திருநாள் ஆகும்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா. மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவமே வைகுண்ட ஏகாதசியாகும். இத்திருவிழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என்று மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் அரையர்களின் அபிநயம், வியாக்யானத்துடன் திருநெடுந்தாண்டகம் நடைபெற்றது. அப்போது அரையர்கள் திருநெடுந்தாண்டகம், மின்னுருவாய் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார்கள்.

    இன்று (சனிக்கிழமை) பகல் பத்து திருமொழியின் முதல் திருநாள் ஆகும். இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.15 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அரையர் சேவை நடக்கிறது. அப்போது பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம். பகல் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், 3 மணி முதல் 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெறும்.

    மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புறப்பாட்டுக்காக திரையிடப்படும். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை பூஜை நேரம் என்பதால் அனுமதி கிடையாது. மாலை 6.45 மணிக்கு மேல் 9 மணிவரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

    பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருமொழி என்றும், ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருவாய் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து திருவாய் மொழி முதல் திருநாளான 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அம்மா மண்டபம் ரோடு, தெற்கு வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல், சாத்தார வீதி ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள், கடைகளின் மேற்கூரைகள், கீற்றுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதை கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    டிசம்பர் 17-ந் தேதி மோகினி லங்காரம், 18-ந் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் தேதி தீர்த்தவாரி, 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

    ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமபதவாசல் வழியாக, சந்திர புஷ்கரணி, தவிட்ரவாசல் வழியாக மணல்வெளிக்கு செல்லும் பகுதிகளில் தகர கூரைகள் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளன.

    இதேபோல் வெள்ளை கோபுரம் அருகிலும் விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைகுண்ட ஏகாதசி விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்ட உள்ளன.
    ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போனதாக கூறப்பட்ட வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #idolmissing
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்த டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

    அந்த மனுவில், ‘ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 
    ×