என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 145791
நீங்கள் தேடியது "அர்ஜென்டினா"
ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #France #Argentina
புவனேஸ்வர்:
14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.
அவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 - 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
ஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #France #Argentina
உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #HockeyWorldCup2018 #Argentina #NewZealand
புவனேஸ்வரம்:
16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.
இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணி, 20-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டிமோத்தீ கிளமென்ட் கோல் அடித்தார். ஸ்பெயின் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முயற்சி மேற்கொண்டனர். பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர் ஆர்துர் தைப்ரே அபாரமாக செயல்பட்டு பெனால்டி கார்னர் உள்பட பல வாய்ப்புகளை முறியடித்தனர். முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
48-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் அல்வரோ இக்லிசியஸ் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் குய்சோ கோர்டஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவிடமும், பிரான்ஸ் அணி நியூசிலாந்திடமும் தோல்வி கண்டு இருந்தன.
மற்றொரு லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுவது பிரகாசமாகி இருக்கிறது. அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பிரான்சை சாய்த்து இருந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (மாலை 5 மணி), அயர்லாந்து-சீனா (இரவு 7 மணி) அணியும் மோதுகின்றன.

அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஜி ஜின்பிங் மற்றும் ஷின்சோ அபே உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். #G20summit #Modi
புய்னோஸ் எய்ரேஸ்:
ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே, அர்ஜென்டினாவில் இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi
ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
புவனேஸ்வர்:
14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதற்கும் அடுத்த வினாடியே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து மீண்டும் சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னரில் கான்சலோ பெய்லாட் கோலாக்கினார்.இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜென்டினா சென்றடைந்தார். #ModileaveArgentina #G20summit
புய்னோஸ் எய்ரேஸ்:
ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா புறப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை அர்ஜென்டினா தலைநகரம் புய்னோஸ் எய்ரேஸசை சென்றடைந்தார். விமான நிலையம் வந்த மோடிக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார். மாநாடு முடிந்ததும் அங்கிருந்து டிசம்பர் 2-ம் தேதி அவர் தாயகம் திரும்புகிறார் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. #ModileaveArgentina #G20summit
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின், பிரான்ஸ்- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #HockeyWorldCup2018
புவனேஷ்வர்:
14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது.
நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கிய 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்தை வருகிற 2-ந்தேதி எதிர் கொள்கிறது. இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என் கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.
2-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின் (மாலை 5 மணி), பிரான்ஸ்- நியூசிலாந்து (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018

20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. #INDvARG #COTIF2018 #COTIFCup
வாலென்சியா:
20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 6 முறை உலக சாம்பியனான (20 வயதுக்கு உட்பட்டோர்) அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி தரப்பில் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்திலும், அன்வர் அலி 68-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 54-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜாதவ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி பெற்ற முன்னிலையை போராடி தக்க வைத்து கொண்டது.
மேற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஈராக்கை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் இந்திய வீரர் புவனேஷ் வெற்றிக்கான கோலை அடித்தார். ஈராக் அணியை இந்திய அணி தோற்கடித்து இருப்பது இதுவே முதல்முறையாகும். #INDvARG #COTIF2018 #COTIFCup

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #WorldCupfootball2018
கசான்:
21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கி யது.
இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
இன்று ஓய்வு நாளாகும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.
இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.
நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.
3-ந்தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ந்தேதி நடக்கிறது. #FIFA2018 #WorldCupfootball2018

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.
இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.
3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria
‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.
ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
மாஸ்கோ:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.
இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,
‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார். #DiegoMarodona #Argentina

×

X