search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்ப்ஸ்"

    ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    வாஷிங்டன்:

    உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

    வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே

    அவ்வகையில், இந்த ஆண்டு நிலவரப்படி உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார்.

    இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
    இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

    தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

    ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.



    தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia 

    இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia
    இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ரேஸ் 3 படம் மற்றும் விளம்பர படங்கள் மூலமும் அவர் இத்தனை கோடியை சம்பாதித்துள்ளார்.

    சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி (ரூ.228.09 கோடி) இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் (ரூ.185 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.



    இந்தப் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே (ரூ.112.8 கோடி) 4-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய பெண் பிரபலம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைத்துள்ளது.

    தீபிகாவை தொடர்ந்து தோணி (ரூ.101.77 கோடி) 5-வது இடத்திலும், அமீர் கான் (ரூ.97.5 கோடி), அமித்தாப் பச்சன் (ரூ.96.17 கோடி), ரன்வீர் சிங்(ரூ.86.67 கோடி), சச்சின் டெண்டுல்கர் (ரூ.80 கோடி), அஜய் தேவ்கன்(ரூ.75.5 கோடி) அடுத்த இடங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.



    ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia 

    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக கூறிய நடிகை சுருதி ஹாசன், தனக்கும், அப்பாவுக்கு மத நம்பிக்கை பற்றிய கருத்து வேறுபாடு இருப்பதாக கூறினார். #ShrutiHaasan
    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை சுருதி ஹாசன் அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

    ‘ சினிமாவில் நான் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்து நடித்தது தான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கதாபாத்திரத்திலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

    மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் ஆன்மீக சக்தி என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலாயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.



    அதேபோல் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்க வேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான்.

    தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

    நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமையடைகிறேன் ’ என்றார். #ShrutiHaasan

    ×