search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிங்காஷ்டகம்"

    தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய லிங்காஷ்டகத்தை (தமிழில்) அறிந்து கொள்ளலாம்.
    அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

    நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்

    தூயசொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்

    பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 1

    காமனை எரித்த பேரெழில் லிங்கம்

    இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்

    வழி வழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 2

    திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்

    சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்

    தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 3

    படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்

    கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்

    தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 4

    குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்

    பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்

    வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 5

    அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்

    அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்

    கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 6

    எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்

    எல்லாப் பிறப்பிற்கும் காரண லிங்கம்

    அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 7

    வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

    வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்

    தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 8

    (ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழாக்கம் நிறைவு)
    ×