search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாவலர்"

    மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #DalaiLama
    மைன்புரி :

    திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கீழே அழைத்துவந்தனர். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நபர் பாதுகாவலர் தேவேந்திரா என தெரியவந்தது. உடனே அவர் வெளியேற்றப்பட்டதுடன், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #DalaiLama
    பீகார் மாநிலத்தில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட வாகனத்தின் காவலரை துப்பாக்கியால் சுட்டு, வாகனத்தில் இருந்த 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இன்று பணத்தை இடமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாவலர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து 52 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பணம் எடுத்துச் சென்ற வாகனம், வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Bihar
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர்.
    ஜம்மு:

    காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

    இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். 
    ×