search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்றுமதி"

    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
    • மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழில் சார்ந்த ஏற்றுமதிகள், பொறியியல் சம்பந்தமான ஏற்றுமதிகள் மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

    அதில் மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்று உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23-ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023-ம் ஆண்டிற்கான விவரங்களை – ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

    ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக் கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.

    மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இந்த ஆண்டுடன் விலக கத்தார் தீர்மானித்துள்ளது. #QatarWithdraw #OPEC #QatarEnergyMinister
    தோஹா:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.
     
    இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி கடந்த மாதம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

    நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.



    சவுதி அரேபியாவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

    இந்நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து 1-1-2019 முதல் விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, ‘நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.

    ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம் என்று குறிப்பிட்டுள்ளார். #QatarWithdraw  #OPEC  #QatarEnergyMinister
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினரின் எதிர்ப்பால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. #SheepExport #Maharashtra
    மும்பை:

    விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக இரண்டாயிரம் ஆடுகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேற்று மதியம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயின் சமூகத்தினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஆதரவு கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இதனால், ஆடுகள் ஏற்றுமதி திட்டத்தை அம்மாநில அரசு ஒத்திவைத்துள்ளது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஏற்றுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய திகம்பர் ஜெயின் மகாசபா சமிதியின் தலைவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இதைவிட சிறந்த வழிகள் பல இருப்பதாகவும், ஆடுகளை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #SheepExport #Maharashtra
    இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தரமற்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டாம் என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு நேற்று சென்னைக்கு வந்திருந்தார். சென்னை கிண்டியில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.) ஏற்பாடு செய்திருந்த ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

    அப்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு பேசியதாவது:-

    ஏற்றுமதியாளர்களை எப்போதும் என் குடும்பத்தினராகவே கருதுகிறேன். நாம் எந்த வகையில் சேர்ந்து செயல்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

    தற்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு 7.6 சதவீதமாக உள்ளது. இது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் அளவு 5 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை நான் தீர்க்கதரிசனமாக கூறவில்லை. இதுதான் இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதில், உற்பத்திப் பிரிவு, சேவைப் பிரிவு, வேளாண்மைப் பிரிவு, ஏற்றுமதி ஆகியவற்றில் இருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி அமைகிறது.

    ஏற்றுமதியில் தற்போது நாங்கள் புதிய பட்டியல் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதன்படி, எந்த நாட்டுக்கு என்னென்ன ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் தரப்படும்.

    விற்பனைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தயாரிப்புகள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக தனி பருவ இதழை வெளியிட இருக்கிறோம். இந்த பருவ இதழ் அனைத்து ஏற்றுமதியாளருக்கும் அனுப்பப்படும்.

    தரமற்ற பொருட்களை தயாரிக்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ வேண்டாம். யார் அதை அனுப்பினாலும், இந்தியாவில் இருந்து தரமற்ற பொருட்கள் வருகின்றன என்றுதான் வெளிநாடுகளில் பேசப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கப்படும்.

    ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.

    வேளாண் உற்பத்தி ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மூலம் பெறப்பட்ட 620 மில்லியன் டன் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடும்.

    காய்கறி, பழம் போன்றவற்றின் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் செயல்பட்டாலும், அவற்றை ஏற்றுமதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நிருபர்களுக்கு, மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அளித்த பேட்டி வருமாறு:-

    சென்னையில் முதல்-அமைச்சரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது புதிய தொழில் தொடங்கும் கொள்கைகளை உருவாக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    சென்னையில் 2-ம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். வேளாண் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    ஏற்றுமதியில் திருப்பூர், உலக மையமாக விளங்குவதைப் போல, தமிழகத்தில் மேலும் பல உலக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×