என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 147661
நீங்கள் தேடியது "அர்ஜென்டினா"
அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்குவது பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். #G20summit #Modi #XiJinping
புய்னோஸ் எய்ரேஸ்:
ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நாளை தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜென்டினா சென்றார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாதமும், முற்போக்குத் தன்மையும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. #G20summit #Modi #XiJinping
உலக கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் கூறியுள்ளார்.
பீஜிங்:
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சீனா சென்றிருந்த இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமிடம், 2018-ம்ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் எந்த அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை சந்திக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்தார். மேலும் அவர், ‘இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கு நிறைய அனுபவம் கிடையாது. பெரிய அணிகளை சந்திக்க வேண்டி இருப்பதால் இங்கிலாந்துக்கு இந்த உலக கோப்பை பயணம் இனி தான் கடினமாக இருக்கும்’ என்றார்.

×

X