search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபுல்"

    ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Kabulsuicideattack #Kabulattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அருகில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பிரிட்டன் பாதுக்காப்பு நிறுவனம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இந்த நிறுவனம், காபுலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #Kabulsuicideattack #Kabulattack
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afganistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மீது அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சகத்தில் இருந்து வெளிவரும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,ம் இதில் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Afganistan 
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய மனித குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #Kabulsuicideblast

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (மதத் தலைவர்கள்) பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த ஒருவன் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.



    இந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்தியில் 70 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Kabulsuicideblast
    ×