search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைகாட்சி"

    பிலிப்ஸ் நிறுவனம் புதிய எல்.இ.டி. மற்றும் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Philips



    டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

    தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளிரச் செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் ஹெச்.டி. வழங்கப்பட்டிருக்கிறது. இது புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான காட்சியை பிரதிபலிக்கும்.



    பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.

    இதனுடன் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது. 

    புதிய 22 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. சேவையில் தமிழ் மொழியுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட சேனல்களை கண்டுகளிக்க மாத சந்தா 175 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #TamilNadu



    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பினை ரூ.125 (வரிகள் தனி)க்கு மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் பேக்கினை ரூ.175-க்கும், 407 சேனல்களைக் கொண்ட ஹெச்.டி. பேக்கினை ரூ.225க்கும் வழங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் வாடிக்கையாளர்கள் தேவையினை கருத்தில் கொண்டு அவர்களது தாய்மொழியில் ஒளிபரப்பப்படும் டி.வி. சேனல்களை கண்டு களித்திட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 3 தனித்தனி சேனல் பேக்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் தெலுங்கு சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் கன்னட சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் மலையாள சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் ரூ.175 (வரிகள் தனி) என்ற மாத சந்தா கட்டணத்தில் வழங்கப்படும்.

    இந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி. ஆபரேட்டர்களுக்கு ரூ.100-ம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.75-ம் பங்கீடு செய்யப்படும்.
    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #SMARTTV



    எல்ஜி நிறுவனத்தின் புதிய தொலைகாட்சி மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய டிவி மாடல்கள் OLED, சூப்பர் UHD, UHD மற்றும் ஸ்மார்ட் டிவி பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளன. 

    இவற்றில் ஆல்ஃபா 7 மற்றும் ஆல்ஃபா 9 பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. வாய்ஸ் கன்ட்ரோல், வெப் ஓ.எஸ். சப்போர்ட், மொபைல் ரெடி கனெக்ஷன் ஓவர்லே மற்றும் டால்பி அட்மாஸ் சரவுன்டு சவுன்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    அனைத்து எல்ஜி டிவி மாடல்களிலும் புதிய ரிமோட் கன்ட்ரோல் - மேஜிக் ரிமோட் என்ற பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பாயின்ட், க்ளிக், ஸ்கிரால் மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதி இல்லாமலும் 800-க்கும் அதிகமான வாய்ஸ் கமான்ட்களை புதிய  டிவி மாடல்கள் சப்போர்ட் செய்கின்றன. இந்த டிவிக்கள் கேமிங் கன்சோல்களில் இருந்து சவுன்ட் பார் உள்ளிட்டவற்றை செட்டப் செய்யும் வழிமுறைகளுடன் வருகிறது.

    இத்துடன் மொபைல் கனெக்ஷன் ஓவர்லே எனும் அம்சம் மொபைல் மற்றும் தொலைகாட்சி திரைகளை ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது. இத்துடன் பயனர்கள் கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை எல்ஜி டிவியில் கிளவுட் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஆப் மூலம் பயன்படுத்த வழி செய்கிறது.



    இதில் வழங்கப்பட்டு இருக்கும் ப்ளூடூத் அம்சம் கொண்டு பயனர்கள் டிவி ஆடியோக்களை, ப்ளூடூத் வசதி கொண்ட ஆடியோ சாதனம் அல்லது ஸ்மார்ட்போன்களில் கேட்டு ரசிக்க முடியும். மேலும் HDR, டால்பி விஷன், டெக்னிகலரின் மேம்படுத்தப்பட்ட HDR வசதி, HDR 10 ப்ரோ மற்றும் ஹெச்.எல்.ஜி. ப்ரோ உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.

    எல்.ஜி.-யின் 2018 OLED டிவி மாடல்களில் ஆல்ஃபா 9 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நாய்ஸ் ரிடக்ஷன் அம்சம், மேம்படுத்தப்பட்ட கலர் கரெக்ஷன் அல்காரிதம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, உயர் ரக ஃபிரேம் ரேட் மூலம் நொடிக்கு 120 ஃபிரேம் தரத்தில் அதிக துல்லியமான மோஷன் படங்களை வழங்குகிறது.

    எல்ஜி நிறுவனத்தின் 2018 சூப்பர் UHD டிவி மாடல்களில் 4K, தின்க் ஏ.ஐ. (ThinQ AI), ஆல்ஃபா 7 பிராசஸர், டால்பி அட்மாஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் நானோ செல் டிஸ்ப்ளே கிட்டத்தட்ட 100 கோடி நிஜ வாழ்க்கை நிறங்களை பிரதிபலிக்கிறது, இது வழக்கமான டிவி மாடல்களை விட 64 மடங்கு தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு 2018 OLED மற்றும் சூப்பர் UHD டிவி மாடல்களிலும் 4K சினிமா HDR மற்றும் டால்பி அட்மாஸ் சார்ந்த சரவுன்டு சவுன்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    எல்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய டிவி மாடல்கள் 32 இன்ச் முதல் 77 இன்ச் விலை ரூ.32,500-இல் துவங்குகிறது. #SMARTTV
    சாம்சங் நிறுவனத்தின் கியூ எல்இடி, யுஹெச்டி, ஸ்மார்ட் கனெக்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் 2018 தொலைகாட்சி மாடல்கள் - கியூ எல்இடி (QLED), மிட்-ரேஞ்ச் யுஹெச்டி (UHD) மற்றும் மேக் ஃபார் இந்தியா கான்செர்ட் சீரிஸ் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    புதிய தொலைகாட்சி மாடல்களில் தலைசிறந்த வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட திரை மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாம்சங் புதிய கியூ எல்இடி டிவிக்களில் ஆம்பியன்ட் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது, இது நாள் முழுக்க பயனுள்ள தகவல்களை வழங்கி கொண்டிருக்கும். இந்த டிவி சுவரில் மிக நேர்த்தியாக பொருந்திக் கொண்டு காட்சிகளை சிறப்பாக ஒளிபரப்புகிறது. 

    இத்துடன் வெப்பநிலை விவரங்களை திரையில் வழங்குவதோடு, உங்களின் புகைப்படங்களை பேக்கிரவுன்டு புகைப்படங்களாக செட் செய்யும் வசதியை வழங்குகிறது.



    இவற்றில் உள்ள ஒன் இன்விசிபிள் கனெக்ஷன், சிறிய கேபிள் பயனரின் பவர் மற்றும் ஏவி தகவல்களை டிவிக்கு கொண்டு செல்கிறது. அதிகபட்சம் 15 மீட்டர் நீலமாக இருக்கும் இந்த கேபிள் டிவியை டேட்டா அல்லது மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டிய தேவையை போக்குகிறது.

    இத்துடன் எஸ் வாய்ஸ் (S VOICE) உடன் உரையாட முடியும். மேலும் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் வழங்கப்பட்டு இருப்பதால், டிவியை மற்ற இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) சாதனங்களுடன் இணைத்து, தகவல் பரிமாற்றம், நோட்டிஃபிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
     
    புதிய சாம்சங் யுஹெச்டி டிவிக்களில் சுப்பீரியர் ஹை-டைனமிக் ரேஞ்ச் (superior High Dynamic Range) மூலம் இயங்குகிறது. இவை மிக நுனுக்கமான பிரைட்னஸ், டீப் கான்ட்ராஸ்ட், காட்சிகளை அதிக தெளிவாக அவற்றின் இயற்கை நிறங்களில் பிரதிபலிக்கும். இதன் டைனமிக் க்ரிஸ்டல் கலர் தொழில்நுட்பம் அதிக தரத்தில் காட்சிகளை பார்க்க வழி செய்கிறது. யுஹெச்டி வேரியன்ட்களில் ரிமோட் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஹப் மற்றும் ஸ்மார்ட் கன்வெர்ஜன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கான்செர்ட் சீரிஸ் மாடல்களில் ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 2018 கான்செர்ட் சீரிஸ் டிவிக்களில் புதிய சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஹார்டுவேர் மற்றும் மென்பொருள்களை இணைந்து அதிக தரமுள்ள சினிமாடிக் அனுபவத்தை வழங்குகிறது. இதில் வழங்கப்படடு இருக்கும் 4 ஸ்பீக்கர்கள் ஒவ்வொன்றும் 10W சவுன்ட் வழங்குகிறது. 

    இத்துடன் ப்ளூடூத் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்மார்ட் ஹப் அம்சம் இணையத்தில் தரவுகளை வழங்கும் ஜியோ சினிமா, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பல்வேறு சேவைகளில் உள்ள வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.

    புதிய 8 சாம்சங் கியூ எல்இடி டிவிக்கள் 55-இன்ச் முதல் 75-இன்ச் வரை கிடைக்கின்றன, இவற்றின் விலை ரூ.2,45,000 முதல் துவங்குகிறது. என்ட்ரி-லெவல் யுஹெச்டி மாடல் 7100 சீரிஸ் முதல் துவங்குகிறது. யுஹெச்டி டிவி விலை ரூ.64,900 முதல் துவங்குகிறது. ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் விலை ரூ.27,500 முதல் துவங்குகிறது.
    ×